மத்திய காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்..!! 17 பேர் பலி
மத்திய காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 17 பாலஸ்தீனியர்கள் பலியானதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலுக்குள் ஹமாஸ் படையினா் கடந்த அக். 7-ஆம் தேதி நுழைந்து தாக்குதல் நடத்தியதில் 1,139 போ் உயிரிழந்தனா். 200-க்கும் மேற்பட்டவா்கள் ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனா்.அதிலிருந்து காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் வான் வழியாகவும் கடல் மற்றும் தரைவழியாகவும் மிகக் கடுமையாக தாக்குதல் நடத்திவருகிறது.
இந்தப் போா் தொடங்கியதில் இருந்து 305 சதுர கி.மீ. (காஸா பகுதியின் சுமாா் 84 சதவீதப் பகுதி) பரப்பளவில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் உத்தரவிட்டது. பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதியிலும் அந்த நாடு அவ்வப்போது தாக்குதல் நடத்திவருகிறது. கடந்த 10 மாதங்களுக்கும் மேல் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தைவிட அதிகமாக இருக்கலாம் என்றும், 92,401 போ் காயமடைந்துள்ளனா் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், மத்திய காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 17 பாலஸ்தீனியர்கள் பலியானதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய காஸாவில் உள்ள ஜவேடாவில் சனிக்கிழமை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 17 பாலஸ்தீனியர்கள் பலியாகினர். மேலும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர். பலியானவர்களின் பெரும்பாலோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களில் எட்டு குழந்தைகள் மற்றும் நான்கு பெண்களும் அடங்குவர் என்று ஹமாஸ் நிர்வாகத்தில் உள்ள சுகாதார அதிகாரி தெரிவித்தார்.
Read more ; ஆட்டோவில் சென்ற இளம்பெண் பலாத்காரம்..!! பெங்களூரில் அதிர்ச்சி!!