For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

காசா, லெபனான் முழுவதும் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!. 50க்கும் மேற்பட்டோர் பலி!.

More than 56 killed in Israeli strikes across Gaza & Lebanon
05:40 AM Nov 18, 2024 IST | Kokila
காசா  லெபனான் முழுவதும் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்   50க்கும் மேற்பட்டோர் பலி
Advertisement

Israel airstrikes: Beit Lahia மற்றும் Bureij அகதிகள் முகாம் உட்பட பல்வேறு இடங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

Advertisement

கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது. அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், 101 இஸ்ரேலியர்கள் ஹமாஸ் வசம் பணய கைதிகளாக உள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதில், பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியிருந்தது.

இருப்பினும், இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், காசா முனையில் இஸ்ரேல் இன்று வான்வழி தாக்குதல் நடத்தியது. காசா முனையில் உள்ள நசிரத் அகதிகள் முகாமை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.

இதேபோல், Beit Lahia மற்றும் Bureij அகதிகள் முகாம் உட்பட பல்வேறு இடங்களை குறிவைத்து ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதே நேரத்தில் பெய்ரூட்டின் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹெஸ்பொல்லாவின் கோட்டையையும் தாக்கியது என்று சிவில் பாதுகாப்பு தெரிவித்துள்ளது. பாலஸ்தீன பிரதேசத்தில் சமீபத்திய வன்முறையில், இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டதாக சிவில் பாதுகாப்பு நிறுவனம் கூறியது. ஞாயிற்றுக்கிழமை ஹமாஸ் நடத்தும் காசாவின் சுகாதார அமைச்சகம், 13 மாதங்களுக்கும் மேலான போரில் ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை 43,846 ஐ எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Readmore: கற்பழிக்கும் காட்சியை மட்டும் 4 மணி நேரம் எடுத்தார்கள், சத்யராஜ் குறித்து கஸ்தூரி கூறிய தகவல்..

Tags :
Advertisement