முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இரக்கமே இல்லாத இஸ்ரேல்!… உலக வரைபடத்தில் காஸா பகுதியே இருக்கக்கூடாது!… இஸ்ரேல் நிதியமைச்சர் சர்ச்சை பேச்சு!

06:38 PM Nov 15, 2023 IST | 1newsnationuser3
Advertisement

இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக இதுவரை காசாவில் ஆயிரக் கணக்கான குழந்தைகள் உள்பட 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். 200க்கும் மேற்பட்ட இஸ்ரேல் மற்றும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ராணுவம் இறங்கியுள்ளது. அதேநேரம் காசாவில் உள்ள இரண்டு மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Advertisement

கடல், வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து தற்போது தரை வழியாக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், காஸாவின் மருத்துவமனைகள், மசூதிகள், முகாம்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. காஸாவின் அல்-ஷிபா மருத்துவமனை அமைந்துள்ள பகுதியிலும், மருத்துவமனை வளாகத்திலும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மருத்துவமனைகள் மீதான தங்களது ‘போர்க் குற்றங்கள்’ அனைத்தையும் இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று அழுத்தங்கள் குவிந்து வருகிறது. காஸாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிபா மருத்துவமனையில் 600 முதல் 650 உள்நோயாளிகள் உள்ளனர். அத்துடன் 200 முதல் 500 சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 1,500 இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ளனர். அவர்களுக்கு மின்சாரம், குடிநீர், உணவு போன்ற வசதிகள் இல்லாததால், அவர்களது உயிர்கள் ஆபத்தில் உள்ளனர்.

இந்தநிலையில், உலக வரைபடத்தில் காஸா பகுதியே இருக்கக்கூடாது என்று இஸ்ரேல் நிதியமைச்சர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நேதன்யாகுவின் தலைமையிலான கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் தீவிர வலது சாரிகட்சிகளில் ஒன்றான யூத தாயக கட்சியின் தலைவரான இவர், காஸா பகுதியில் வசிக்கும் அரேபியர்கள் அனைவரும் தாமாக முன்வந்து உலகின் பிற நாடுகளுக்கு வெளியேற வேண்டும் என்று கூறியுள்ளார். கடந்த 75 ஆண்டுகளாக அவர்கள் காஸா பகுதியில் அகதிகளாகவும், வறுமை மற்றும் தாக்குதல் அபாயத்திலும் இருந்துவருகின்றனர். இங்கிருந்து அவர்கள் வெளியேறுவதுதான் அவர்களுக்கான உண்மையான நிவாரணம் ஆகும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், உலக வரைபடத்தில் காஸா என்ற ஒரு ஆட்சிப் பகுதி இருப்பதை இஸ்ரேலால் இனியும் அனுமதிக்க முடியாது என்று அவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயத்தில், காஸாவில் தற்போது நடைபெற்றுவரும் போருக்கு பிறகு அந்த பகுதியின் எதிர்காலம் குறித்த கலக்கமும் உலக நாடுகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

Tags :
இஸ்ரேல் நிதியமைச்சர்உலக வரைபடத்தில்காஸா பகுதியே இருக்கக்கூடாதுசர்ச்சை பேச்சு
Advertisement
Next Article