இரக்கம் காட்டாத இஸ்ரேல்!. வான்வழித் தாக்குதலில் 22 பேர் பலி!. 117 படுகாயம்!
Israel air strike: பெய்ரூட்டில் நேற்று நடந்த இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் 22 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 117 பேர் காயமடைந்தனர் என்று லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 1ம் தேதி முதல் தரை மற்றும் வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தி வருகிறது. இதில், மக்கள் பலியாகி வருவது தொடர் கதையாகியுள்ளது. இந்தநிலையில் நேற்று(வியாழன்) இரவு பெய்ரூட்டின் ராஸ் அல்-நபா மற்றும் புர்ஜ் அபி ஹைதர் ஆகிய பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில், எட்டு மாடி கட்டிடம் சேதமடைந்தது. இந்த தாக்குதலில் 22 பேர் பலியாகினர், 117 பேர் காயமடைந்தனர்.
தெற்கு லெபனானில் உள்ள ஐ.நா., இடைக்காலப் படை (யுனிபில்) தலைமையகம் மற்றும் ஐ.நா., அமைதிப்படை நிலைகள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில், யுனிபில் வீரர்கள் இருவர் படுகாயமடைந்தனர். இருப்பினும், காயமடைந்த வீரர்கள் எந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்ற விபரத்தை ஐ.நா., வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: புளோரிடாவில் கரையை கடந்த மில்டன் புயல்!. 12 பேர் பலி!. மின்வெட்டு, வெள்ளத்தால் மக்கள் கடும் அவதி!