For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Israel: 800 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் தயார்!… பேச்சுவார்த்தையில் முடிவு!

08:59 AM Mar 25, 2024 IST | Kokila
israel  800 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் தயார் … பேச்சுவார்த்தையில் முடிவு
Advertisement

Israel: காஸாவில் ஹமாஸ் பிடியில் உள்ள 40 பணயக்கைதிகளுக்காக சுமார் 800 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் தயார் என்று கத்தாரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பாலஸ்தீன நாட்டின் காஸாவில் உள்ள ஹமாஸ் படைகள் தொடங்கி வைத்த போர், அவர்களுக்கே வினையாகி விட்டது. இஸ்ரேல் படைகள் மிக உக்கிரமாக தாக்கி வருகிறது. இருதரப்பிலும் சேதங்கள் ஏற்பட்டிருந்தாலும் காஸாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள், குழந்தைகள், பெண்கள் உயிரிழந்துள்ளனர். பலர் மாயமாகியுள்ளனர். இருதரப்பிலும் பிணையக் கைதிகளாக பல நூறு பேர் பிடித்து செல்லப்பட்டுள்ளனர். இந்தப் போர் 170 நாட்களை கடந்துவிட்டது.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று ஐ.நா மற்றும் பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஹமாஸ் இறங்கி வந்தாலும் இஸ்ரேல் விடுவதாக இல்லை. அந்நாட்டு அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், ஹமாஸ் படையினர் வேறோடு அழிக்கும் வரை ஓயமாட்டேன் என்று கூறியுள்ளார். இதனால் முடிவில்லாமல் போர் தொடர்கிறது.

இதற்கிடையில் கத்தார், ஜோர்டான், எகிப்து உள்ளிட்ட நாடுகள் அமைதி பேச்சுவார்த்தைக்கு காய் நகர்த்தி வருகின்றன. இருதரப்பிலும் மாறி மாறி பேசி சமாதான உடன்படிக்கைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் கத்தார் எடுத்துள்ள நடவடிக்கை பெரிதும் பாராட்டக் கூடியது. இருதரப்பு பேச்சுவார்த்தையின் படி, ஹமாஸ் படையினர் நிரந்தரமாக போரை முடிவுக்கு கொண்டு வர தயாராக இருப்பதாக தெரிகிறது.

இந்தநிலையில், டைம்ஸ் ஆஃப் இந்தியா இஸ்ரேல் சேனல் 12ஐ மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது. அதில் காஸாவில் ஹமாஸ் பிடியில் உள்ள 40 பணயக்கைதிகளுக்காக சுமார் 800 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் தயார் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் கத்தாரில் நடந்த பேச்சுவார்த்தையின்போது, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதிகளில் 100 பேர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Readmore: அடுத்த வைரஸ் எச்சரிக்கை!… எந்தநேரத்திலும் மற்றொரு தொற்றுநோய் தாக்கலாம்!… நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்!

Tags :
Advertisement