ISRAEL- IRAN WAR | கச்சா எண்ணெய், இந்திய ரூபாயில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்.?
ISRAEL- IRAN WAR: ஈரான்-இஸ்ரேல் போர் தீவிரமடைந்தால், கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு $100ஐ தொடும் என எதிர்பார்க்கப்படுவதால், இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (சிஏடி) பற்றிய கவலைகள் மீண்டும் எழுந்துள்ளன.
உலகில் 80 சதவீதம் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதோடு உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் நுகர்வோராக இந்தியா இருக்கிறது. ஈரான் மற்றும் இஸ்ரேலிய போரால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் மற்ற நாடுகளை விட இது இந்தியாவை அதிகமாக பாதிக்கும்.
எண்ணெய் விலைக்கும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறைக்கும் (CAD) அதிக தொடர்பு இருப்பதாக வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சராசரி எண்ணெய் விலை அதிகரிக்கும் போது, நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கிறது. 3P முதலீட்டு மேலாளர்களின் பகுப்பாய்வின்படி, சராசரி ப்ரெண்ட் கச்சா விலை பீப்பாய்க்கு $40க்கும் குறைவாக இருந்தபோது, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக நடப்புக் கணக்குப் பற்றாக்குறை -0.7 சதவீதமாக இருந்தது.
எனினும் கடந்த காலத்தில் எண்ணெய் விலை பீப்பாய்க்கு $100 முதல் $120 வரை இருந்தபோது, இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் -3.6 சதவீதமாக அதிகரித்தது. கச்சா எண்ணெய் விலையில் பீப்பாய் ஒன்றுக்கு 10 டாலர் அதிகரிக்கும் போது சிஏடி/ஜிடிபி விகிதம் 0.5 சதவீத புள்ளிகள் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிப்பதாக எம்கே குளோபல் பொருளாதார நிபுணர்கள், மாதவி அரோரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் முந்தைய குறிப்பில் கூறியுள்ளனர்.
சமீபத்தில் ஈரான் மற்றும் இஸ்ரேல்(ISRAEL- IRAN WAR) இடையேயான பதற்றங்கள் அதிகரித்திருக்கும் சூழலில் மரபு வழி எரிசக்தியில் குறைந்த அளவிலேயே முதலீடு செய்திருப்பதால் கச்சா எண்ணெய் விலை உயர்வதற்கான சாத்திய கூறுகள் உள்ளன. எனினும் அமெரிக்க ஷேல் உற்பத்தியில் பாரிய அதிகரிப்பு கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் வைத்திருக்கிறது.OPEC எண்ணெய் உற்பத்தியை குறைத்த போதிலும் அமெரிக்கா ஷேல் உற்பத்தி காரணமாக விலையை கட்டுக்குள் இருக்கிறது என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
OPEC உதிரி திறன் தற்போது 4 mb/d ஆகும், இது எண்ணெய் விலையில் ஆறுதல் அளிக்கிறது" என்று 3P முதலீட்டு மேலாளர்களின் CIO, பிரசாந்த் ஜெயின் கூறினார். குறிப்பிடத்தக்க வகையில், இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை டிசம்பர் 2023 இல் முடிவடைந்த காலாண்டில் $10.5 பில்லியனாக (ஜிடிபியில் 1.2 சதவீதம்) குறைந்துள்ளது. இது Q2 FY24 இல் $11.4 பில்லியனில் இருந்து (ஜிடிபியில் 1.3 சதவீதம்) குறைந்துள்ளது.
இந்தியா தனது எண்ணெய் இறக்குமதியை டாலரில் கையாள்வதால் எண்ணெய் இறக்குமதி செலவினங்களின் அதிகரிப்பு டாலருக்கான தேவையை அதிகரிக்கலாம், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறையும்.
தற்போது நிலவும் உயர் அமெரிக்கா வட்டி விகிதம் மற்றும் டாலரை வலுப்படுத்தும் காரணங்களால் அன்னிய செலவாணி டாலர் சொத்துக்களுக்கு திரும்பி இருக்கிறது. இதன் காரணமாக நீடித்த கச்சா விலை உயர்வு நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மற்றும் இந்திய ரூபாயின் மீது மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தும் என கரன்சி வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிகரித்து வரும் எண்ணெய் விலைகள் ஒரு பிரச்சனையாக இருக்கலாம் மற்றும் உள்நாட்டு நாணய சந்தையில் ஏற்ற இறக்கத்தை மீண்டும் கொண்டு வரலாம், இதை ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்த முடிந்தது," என்று கோடக் செக்யூரிட்டீஸ் லிமிடெட்டின் நாணய மற்றும் வட்டி விகித துணைத் தலைவர் அனிந்தியா பானர்ஜி தெரிவித்தார்.
ஜேபி மோர்கன் ஜிபிஐ-இஎம் குளோபல் டைவர்சிஃபைடு இண்டெக்ஸில் (மற்றும் பிற தொடர்புடைய குறியீடுகள்) இந்திய அரசாங்கப் பத்திரங்களைச் சேர்ப்பதன் காரணமாக, இந்தியப் பத்திரச் சந்தையில் 30 பில்லியன் டாலர்கள் வர இருப்பது இந்த கஷ்டமான காலத்தில் ஆறுதலாக அமைந்திருக்கிறது. எனினும் வரும் நாட்களில் கச்சா எண்ணெய் முக்கியமாக கண்காணிக்கப்படும்.