தாக்குதலை கைவிடாத இஸ்ரேல்..!! காஸாவில் இதுவரை 11,000 பேர் பலி..!! அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!
இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் காஸா பகுதியில் இதுவரை 11,000 பேர் பலியாகியுள்ளதாக பாலஸ்தீன அரசு அறிவித்துள்ளது.
கடந்த மாதம் 7ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் போர் 35வது நாளாக உக்கிரமடைந்துள்ள நிலையில், காஸாவில் மாபெரும் பேரழிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் போரை நிறுத்துமாறு ஐநா, மற்றும் உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், ஹமாஸ் பிடித்து வைத்திருக்கும் தங்கள் நாட்டவரை விடுவிக்காதவரை, ஹமாஸ் அமைப்பை அடியோடு அழிக்காதவரை போரை நிறுத்தமாட்டேன் என்கிறது இஸ்ரேல் ராணுவம். தங்கள் நாட்டவர்கள் விடுவிக்கப்படுவதற்காக சிறிது நேரம் மட்டும் போர் நிறுத்தம் செய்யலாம் என்றும் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.
இந்நிலையில், நாள்தோறும் 4 மணி நேரம் வடக்கு காஸாவில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. கூடுதல் போர் நிறுத்த நேரம் தேவை என்று தான் வலியுறுத்தியதாகவும் அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில், முழு போர் நிறுத்தம் இருக்காது என்று கூறும் இஸ்ரேல், “வடக்கு காஸாவில் சில பகுதிகளில் சிறுசிறு போர் நிறுத்தங்கள் இருக்கும். மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்கவே இந்த போர் நிறுத்தம்” என்றும் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், காசாவின் அல்-ஷிபா மருத்துமனை மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று நடத்திய தாக்குதலில் 22 பேர் பலியாகி உள்ளதாக ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அல்-ரான்டிசி மருத்துவமனை, அல்-நாஸர் மருத்துவமனை, அரசு கண் மருத்துவமனை மற்றும் மனநல மருத்துவமனை ஆகிய நான்கு மருத்துவமனைகளையும் இஸ்ரேல் ராணுவம் சுற்றிவளைத்துள்ளது. அதனால் மக்கள் தண்ணீர், உணவு இல்லாமல் மருத்துவமனைகளுக்குள் சிக்கியிருயிருக்கின்றனர்,’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்துள்ளது.