For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தொடர்ந்து குண்டு வீசும் இஸ்ரேல்..!! பலி எண்ணிக்கை 569ஆக உயர்வு..!! பலரின் நிலைமை கவலைக்கிடம்..!!

Israel continues to bombard Lebanon. Due to this, the death toll has risen to 569.
08:32 AM Sep 25, 2024 IST | Chella
தொடர்ந்து குண்டு வீசும் இஸ்ரேல்     பலி எண்ணிக்கை 569ஆக உயர்வு     பலரின் நிலைமை கவலைக்கிடம்
Advertisement

லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்து குண்டு வீச்சு தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்கு பலி எண்ணிக்கை 569 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த 100-க்கும் மேற்பட்ட பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள் ஒரே சமயத்தில் வெடிக்க செய்யப்பட்டன.

யாரும் எதிர்பாராத இந்த கொடூர தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என 37 பேர் உயிரிழந்தனர். 4,000-க்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியதாக குற்றம் சாட்டிய ஹிஸ்புல்லா அமைப்பினர், இஸ்ரேல் நாட்டின் மீது நூற்றுக்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதற்கு பதிலடியாக லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில், ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி இப்ராஹிம் அகில் உள்பட பலர் கொல்லப்பட்டனர். இதனால், ஹிஸ்புல்லா அமைப்பினர் மீண்டும் இஸ்ரேல் மீது 150-க்கும் அதிகமான ராக்கெட் குண்டுகளை வீசி தாக்கினர். இவற்றில் பெரும்பாலானவற்றை இடைமறித்து அழித்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

இந்நிலையில், லெபனானில் நேற்றும் இஸ்ரேல் சரமாரியாக வான்தாக்குதல் நடத்தியது. இதில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 569ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 50 பேர் சிறுவர்கள், 90 பேர் பெண்கள் ஆவர். மேலும், படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1,835 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

Read More : ரயில்வேயில் 5,066 காலிப்பணியிடங்கள்..!! 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Tags :
Advertisement