பள்ளி மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல்!. 30 பேர் பலி!. மீளமுடியா துயரில் காசா!
Gaza: காசாவின் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 30 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மோசமான பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து நடத்திய தாக்குதல், இந்த உக்கிரமான போருக்கு வழிவகுத்தது. இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,200 பேர் உயிரிழந்த நிலையில், இதற்கு பதிலடியாக ஹமாஸுக்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த தாக்குதலில் 30,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை தங்களது தாக்குதல் ஓயாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காசாவில் கடந்த 5 மாதங்களாக இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கு வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.
இந்தநிலையில், நேற்று காசா பகுதியில் உள்ள டெய்ர் அல்-பாலாவில் உள்ள பள்ளி ஒன்றின் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில், குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டனர். அவர்களது சடலங்கள் அல் அக்ஸா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. மேலும் காசாவில் மற்ற இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 11 பேர் கொல்லப்பட்டதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெய்ர் அல்-பலாவின் அல் அக்ஸா மருத்துவமனை இந்த எண்ணிக்கையை உறுதிப்படுத்தியது. இதுவரை காசாவில் நடந்த போரில் 39,100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 17,000 குழந்தைகள் இப்போது பெற்றோர் இல்லாமல் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Readmore: