இஸ்ரேல் குண்டுவீச்சு!. 500-ஐ நெருங்கிய பலி எண்ணிக்கை!. 1,500-க்கும் மேற்பட்டோர் காயம்!. ஐ.நா. கவலை!
Israel bombing: லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 492 பேர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 1,645 பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்குப் பகுதியில் இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் விரைவில் ஒரு வருடத்தை எட்ட உள்ளது. காசா பகுதியில் இருக்கும் ஹமாசை முழுமையாக அழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. காசா மீதான தாக்குதலைக் கண்டித்து லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான பேஜர் கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறியதில் 37 பேர் உயிரிழந்தனர். 3 ஆயிரம் பேர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து வடக்கு லெபனானில் ஹிஸ்புல்லாவின் கோட்டைகளைக் குறிவைத்தது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இதில் ஹிஸ்புல்லா தளபதி உட்பட 44 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக நேற்றுமுன்தினம் இஸ்ரேலின் ஹைபா நகர் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்கினர். இந்த நிலையில், லெபனான் மீது நேற்று இஸ்ரேல் விமானங்கள் சரமாரியாக குண்டுமழை பொழிந்தன. இதில், கடந்த 24 மணி நேரத்தில் லெபனான் முழுவதும் சுமார் 1,300 ஹிஸ்புல்லா இலக்குகள் மீது 650க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. லெபனான் சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, தாக்குதல்களில் 492 பேர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 1,645 பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய தாக்குதல்கள் நாடு முழுவதும் பரவலான குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது மற்றும் இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொல்லாவிற்கும் இடையே ஒரு முழு அளவிலான போரின் கவலைகள் அதிகரித்து வருவதால், தெற்கு மற்றும் கிழக்கு லெபனானின் சில பகுதிகளை விட்டு வெளியேற ஏராளமான மக்கள் கட்டாயப்படுத்தியுள்ளனர். மேலும், லெபனானில் பதற்றம் அதிகரிப்பு, தகவல் தொடர்பு சாதனங்கள், பேஜர்கள், இரு தரப்பிலிருந்தும் ராக்கெட் தாக்குதல்கள் போன்றவற்றின் மீது நாங்கள் பார்த்த தாக்குதல்கள் குறித்து மிகவும் கவலையடைகிறோம் என்று ஐநா மனித உரிமைகள் துறை செய்தித் தொடர்பாளர் ரவீனா ஷம்தாசனி தெரிவித்துள்ளார்.
லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றத்தை கருத்தில் கொண்டு, அமெரிக்க ராணுவம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தனது வீரர்களை அனுப்பத் தொடங்கியுள்ளது. இருப்பினும், தற்போது மிகக் குறைவான வீரர்களே அனுப்பப்படுகின்றனர்.
Readmore: லெபனான் தலைநகரை குறிவைத்த இஸ்ரேல்!. ஊரை விட்டு வெளியேறுங்கள்!. நேதன்யாகு எச்சரிக்கை!