For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஈரான் மீது அதிரடி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. பழிக்கு பழியாக அணுமின் நிலையத்துக்கு குறி?

11:09 AM Apr 23, 2024 IST | Mari Thangam
ஈரான் மீது அதிரடி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்   பழிக்கு பழியாக அணுமின் நிலையத்துக்கு குறி
Advertisement

300 ராக்கெட்டுகளை ஏவி ஈரான் வான்வழித் தாக்குல் நடத்தியதற்கு பழிக்கு பழியாக ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இஸ்ரேல் பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி போர் தொடங்கியது. இந்த போர் கடந்த 7 மாதங்களாக நீடித்து வருகிறது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து ஹமாஸ் ஆயுதப்படையினரை வேட்டையாடி வரும் இஸ்ரேல் காசா பகுதியில் அதிரடித் தாக்குதல்களை நடத்தி வருகிறது

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த போரினால்,  30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்தனர்.

ஹமாஸ் மற்றும் காசா மக்களுக்கு ஆதரவாக மத்திய கிழக்கில் உள்ள பல நாடுகள் இஸ்ரேலை எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில் இம்மாத தொடக்கத்தில் சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் தூதரக உயர் அதிகாரிகள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஈரான் 300 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி அதிரடி தாக்கதலை நடத்தியது. ஈரானின் இந்த தாக்குதலை இஸ்ரேல் தனது அயர்ன் ட்ரோம் மூலம் லாவகமாக எதிர்கொண்டது. இருப்பினும் இனி ஒரு முறை இஸ்ரேல் தங்களை சீண்டினால் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஈரான் எச்சரித்தது.

இந்நிலையில் கடந்த வாரம் ஈரானில் உள்ள இஸ்பஹான் மாகாணம் கடந்த வாரம் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைகளால் தாக்கப்பட்டது. இத்தாக்குதல் இஸ்ரேலில் இருந்து நடத்தப்பட்டதாகவும், ஈரானின் அணுசக்தி நிலையம் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளைக் கொண்ட ஒரு பகுதியை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் இஸ்ரேல் அரசு தாக்குதல் நடத்தியதை ஒப்புக்கொள்ளவும் இல்லை அல்லது மறுக்கவும் இல்லை. இஸ்ரேல் மீது ஈரான் இடைவிடாத ஆளில்லா விமானம், கப்பல் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலை நடத்திய ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன.

ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளால் தாக்கப்பட்ட பகுதிகளின் செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்துள்ளன. இசஃபான் சர்வதேச விமான நிலையத்தின் வடகிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ரஷ்யவைச் சேர்ந்த S-300 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு இந்த தாக்குதலை உறுதி செய்துள்ளது.

Tags :
Advertisement