முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஐ.நா.வுடன் இணைந்து செயல்படும் பள்ளியில் இஸ்ரேல் தாக்குதல்..! 30க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!

08:50 AM Nov 24, 2023 IST | 1Newsnation_Admin
Advertisement

காசாவில் ஐ.நா.வுடன் இணைந்து செயல்படும் பள்ளியில் இஸ்ரேல் தாக்குதல். இதில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

Advertisement

கடந்த அக்டோபர் மாதம்7ஆம் தேதி பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தியத்தில் 1,200 பேர் உயிரிழந்தனர். மேலும், 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளனர். இதையடுத்து, காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போர் 50 நாட்களை நெருங்கி வருகிறது.

இந்நிலையில், பிணைக் கைதிகளை விடுவிக்க ஏதுவாக, 4 நாட்களுக்கு போரை நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இரு தினங்களுக்கு முன் அறிவித்தார், இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் கவனம் பெற்றது. அதோடு, 50 பிணைக் கைதிகள் விடுவிக்கப்படும் அதே வேளையில், இஸ்ரேல் சிறையில் இருந்து 150 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் தகவல் வெளியானது.

4 நாட்கள் போர் நிறுத்தம் அறிவித்த நிலையில், வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து நடத்தும் பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் சுமார் 30 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. காசாவின் பிற பகுதிகளில் வன்முறை மற்றும் தீவிர குண்டுவெடிப்பில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கவைக்கப்பட்ட இந்த பள்ளியில் தாக்குதல் நடத்தியதில் சுமார் 30 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வடக்கு காசாவில் உள்ள இந்தோனேசிய மருத்துவமனையின் பிரதான நுழைவாயில் மற்றும் மின் உற்பத்தியாளர்களைக் குறிவைத்து இஸ்ரேலியப் படைகள் புதிய தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அஷ்ரஃப் அல்-குத்ரா கூறுகையில், "மருத்துவமனை தீவிரமான குண்டுவீச்சுக்கு உட்பட்டுள்ளது, மேலும் கட்டிடத்தின் பெரிய பகுதிகள் குறிவைக்கப்படுகின்றன" என்று கூறினார்.

Tags :
30 killed in Israeli attack on UN school ahead of Gaza trucegazagaza school attackisraelஇஸ்ரேல்காசா
Advertisement
Next Article