சிரியாவின் அலெப்போவை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!… 12 பேர் பலி!… பீதியில் மக்கள்!
Israeli Airstrike: சிரியாவின் அலெப்போ நகருக்கு அருகில் உள்ள தளங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிரியாவின் வடக்கில் அலெப்போவிற்கு அருகில் ஹயான் நகரில் உள்ள ஒரு இடத்தில் தொழிற்சாலையை குறிவைத்து நேற்று நள்ளிரவு 12:20 மணியளவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 12 ஈரானியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திங்கட்கிழமை "நள்ளிரவுக்குப் பிறகு அலெப்போவின் தென்கிழக்கில் இருந்து சில நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது", "ஆக்கிரமிப்பு மற்றும் பொருள், உயிர் சேதத்தை ஏற்படுத்தியது" என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த மே 29ம் தேதி சிரியாவின் மத்தியப் பகுதி மற்றும் கடலோர நகரமான பனியாஸ் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதில் குழந்தை பலியானது. 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக சிரிய ஆட்சி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சிரியாவின் உள்நாட்டுப் போர் வெடித்ததில் இருந்து இஸ்ரேல் அதன் வடக்கு அண்டை நாடுகளின் மீது தாக்குதல்களை நடத்திவருகிறது. அந்தவகையில், காசா பகுதியில் ஹமாஸுடனான போர் அக்டோபர் 7 அன்று தொடங்கியதில் இருந்து தாக்க்குதல் அதிகரித்துள்ளன, அப்போது ஈரான் ஆதரவு பாலஸ்தீனிய போராளிக் குழு இஸ்ரேலுக்கு எதிராக முன்னோடியில்லாத தாக்குதலைத் தொடங்கியது.
சிரியாவின் போர் 2011 இல் டமாஸ்கஸ் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஒடுக்கிய பின்னர் வெடித்ததில் இருந்து அரை மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்றது மற்றும் மில்லியன் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: முக்கிய அறிவிப்பு…! EPFO ஆவணத்தில் பெயர் உள்ளிட்ட அனைத்தும் திருத்தம் செய்யலாம்…!