உங்கள் துணைக்கு அந்த விஷயத்தில் ஆர்வம் இல்லையா..? அப்படினா கண்டிப்பா இதை டிரை பண்ணி பாருங்க..!!
லிபிடோ என்று அழைக்கப்படும் பாலியல் நாட்டம் என்பது ஒருவரின் இயல்பான, உள்ளுணர்வு சார்ந்த விருப்பத்தைக் குறிக்கிறது. இது உடலுறவுக்கான உடலியல் மற்றும் உளவியல் அம்சங்களை உள்ளடக்கியதாகும். பெண்களின் பாலியல் நாட்டம் உடல் மற்றும் உளவியல் என பல்வேறு காரணிகளால் பாதிக்கப்படுகிறது.
மன அழுத்தம் : அதிகளவு மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு ஆகியவை மன ஆரோக்கியத்தை மட்டுமல்ல பெண்களின் பாலியல் ஆசையைக் குறைக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஹார்மோன் : மாதவிடாய், கர்ப்பம், தாய்ப்பால் மற்றும் மெனோபாஸ் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் லிபிடோவை பாதிக்கலாம். இவை யோனி வறட்சிக்கு வழிவகுக்கும். இதனால் உடலுறவின் போது சங்கடமாக உணர்வீர்கள்.
உறவுச் சிக்கல்கள் : எல்லா தம்பதிகளுக்கும் இடையே வாக்குவாதமும் பிரச்சனைகளும் இருக்கும். ஆனால், இது தொடர்ச்சியாக இருந்து, உணர்ச்சி ரீதியான நெருக்கம் இல்லாமலோ அல்லது உறவுகளுக்குள் திருப்தி இல்லாமை இருந்தாலோ, இவையெல்லாம் ஒரு பெண்ணின் பாலியல் ஆர்வத்தை பாதிக்கலாம்.
உடல் உருவம் : சில பெண்களால் தங்களது இயல்பை அப்படியே ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால், எல்லாருக்கும் நேர்மறையான உடல் உருவம் இருப்பதில்லை. எதிர்மறையான உடல் தோற்றம் மற்றும் தன்னம்பிக்கை குறைவும் பாலியல் ஆர்வத்தை குறைக்கும்.
பாலியல் ஆர்வத்தை மேம்படுத்த உதவும் ஒமேகா-3..!!
சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி, ஆளி விதைகள், சியா விதைகள் மற்றும் வால்நட் போன்ற உணவுகளில் ஒமேகா -3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக இருக்கிறது. மக்கள் ஒமேகா -3 சப்ளிமெண்ட்ஸையும் உட்கொள்கிறார்கள். கர்ப்ப காலத்தில் அதிகரித்த கவலையைத் தடுப்பதன் மூலம் கர்ப்பிணிப் பெண்கள் இடையே பாலியல் செயல்பாட்டை மேம்படுத்தி பிரசவத்தின் போது ஏற்படும் பதட்டத்தை ஒமேகா -3 சப்ளிமெண்ட்ஸ் குறைக்கிறது.
உங்கள் பாலியல் ஆர்வக்குறைவுக்கு காரணம் யோனி வறட்சி தான் என்றால், பெண்களுக்கு, அதுவும் குறிப்பாக மெனோபாஸ் கட்டத்தில் ஒமேகா-3 உதவியாக இருக்கும். இது தவிர, நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிப்பதோடு மறைமுகமாக பாலியல் உந்துதலை ஏற்படுத்துகிறது.
இதய ஆரோக்கியம் :
ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் வீக்கத்தைக் குறைத்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதய ஆரோக்கியம் சிறப்பாக இருந்தால் பிறப்புறுப்பு பகுதியில் ரத்த ஓட்டம் மேம்படும். இது உணர்ச்சி தூண்டுதலையும் பாலியல் செயல்பாட்டையும் மேம்படுத்தும்.
மூளை ஆரோக்கியம் :
மூளை ஆரோக்கியத்திற்கு ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மிகவும் அவசியமாகும். ஏனென்றால், அவை மூளை செல்களின் கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருக்கின்றன. இவை பெண்களின் மனநிலை மற்றும் பாலியல் ஆசையில் மறைமுகமாக செல்வாக்கு செலுத்துகிறது.
ஒமேகா -3 சப்ளிமெண்ட்ஸ் சாப்பிட்டால் பக்க விளைவுகள் வருமா..?
உணவுகளின் மூலமாக ஒமேகா-3 ஃபேட்டி ஆசிடை எடுத்துக்கொள்ளும் போது பெரும்பாலான மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. எனினும் ஒமேகா-3 சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளும்போது சில பக்க விளைவுகள் குறித்து நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதிகளவு ஒமேகா-3 சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளும்போது, வயிற்றுப்போக்கு, குமட்டல் அல்லது அஜீரணம் போன்ற இரைப்பை குடல் அறிகுறிகளை ஒரு சிலர் அனுபவிக்கலாம். பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பண்புகளை ஒமேகா-3 கொண்டிருந்தாலும், சரிவிகித டயட்டைப் எப்போதும் நாம் பின்பற்ற வேண்டும். அதுமட்டுமின்றி சீரான உடற்பயிற்சி, மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவது, ஒட்டுமொத்த உடல்நலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது போன்றவை ஆரோக்கியமான பாலியல் நாட்டத்திற்கு உறுதுணையாக இருக்கும்.
Read More : விவசாயிகளுக்கு செம குட் நியூஸ்..!! விவசாய கடன் உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்வு..!! ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!