ரஷ்யா தயாரித்தது புற்றுநோய் தடுப்பூசி இல்லையா?. மக்கள் அனைவருக்கும் இலவசம் என அறிவித்தது ஏன்?. நிபுணர்களின் அடுக்கடுக்கான கேள்விகள்?.
Cancer Vaccine: ரஷ்யா சமீபத்தில் புற்றுநோய் தடுப்பூசி வெற்றிகரமாக உருவாக்கப்பட்டதாக அறிவித்தது. புற்றுநோய் சிகிச்சைக்காக எம்ஆர்என்ஏ தடுப்பூசியை தயார் செய்வதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மிகுந்த மகிழ்ச்சியுடன் அறிவித்திருந்தார். இந்த தடுப்பூசி 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மக்களுக்குக் கிடைக்கும் என்றும் ரஷ்ய மக்களுக்கு இது இலவசமாக வழங்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். இருப்பினும், ரஷ்யாவின் அறிவிப்புக்குப் பிறகு, இந்த தடுப்பூசி இந்தியாவுக்கு வரும் என்று இந்தியா ஆவலுடன் காத்திருக்கிறது.
இருப்பினும், ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி குறித்து நிபுணர்கள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி வருகின்றன. அதாவது, “ரஷ்யா புற்றுநோய் தடுப்பூசியை தயாரித்துள்ளது என்ற செய்தி நல்ல விஷயம்தான். இருந்தாலும்,இது நமக்கு சரியா இல்லையா என்று பார்க்க வேண்டும். இதனால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா? என்று தெரிந்துகொள்ளவேண்டும் என்று குறிப்பிடுகின்றனர்.
டாக்டர் ரவி கோட்சே என்பவர் நியூஸ் டாக்கிற்கு அளித்த பேட்டியில், “புற்றுநோய்க்கு ரஷ்யா தயாரித்துள்ள தடுப்பூசியை நாம் அனைவரும் பார்க்க வேண்டும். அது என்ன வகையான தடுப்பூசி? இது ஒரு தடுப்பு தடுப்பூசியா அல்லது ரஷ்யா ஒரு சிகிச்சை தடுப்பூசியை தயாரித்துள்ளதா? இந்த தடுப்பூசி நம் உடலை எந்த நோயையும் எதிர்த்துப் போராடும் திறன் கொண்டது என்று கேள்வி எழுப்பினார். இருப்பினும், இப்போதைக்கு இதை தடுப்பூசி என்று அழைப்பதை நிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.
டாக்டர் ரவி கூறுகையில், “ரஷ்யா தயாரித்த தடுப்பூசி உலகளாவியதா என்பது இப்போது எங்களுக்குத் தெரியவில்லை. அதாவது, இந்த தடுப்பூசி அனைவருக்கும் வழங்கப்படுமா அல்லது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுமா என்று கேள்வி எழுப்பிய டாக்டர் ரவி, இந்த தடுப்பூசியை புற்றுநோயாளிகளுக்கு மட்டும் போட வேண்டும் என்றால், ரஷ்யா தனது அறிக்கையில் முழு நாட்டு மக்களுக்கும் இதை இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
டாக்டர் ரவி கூறுகையில், புற்றுநோய்க்கான எம்ஆர்என்ஏ சிகிச்சை தடுப்பூசிக்கான ஆராய்ச்சி இந்தியாவில் 30 ஆண்டுகளாக நடந்து வருகிறது. அதே சமயம், அமெரிக்காவில் இதற்கான பணிகள் 20 ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆராய்ச்சி இன்னும் முழுமையாக வெற்றிபெறவில்லை. அப்படியென்றால், புற்றுநோய்க்கான தடுப்பூசியைக் கண்டுபிடித்ததாக ரஷ்யா எப்படி திடீரெனச் சொன்னது?
இந்தியாவிற்கு ரஷ்ய தடுப்பூசி வருவதைப் பற்றி அவர் கூறுகையில், புற்றுநோயைத் தடுக்க உலகளாவிய தடுப்பூசியை ரஷ்யா தயாரித்துள்ளது. மொத்த ரஷ்யாவுக்கும் என்ன கொடுக்கப் போகிறார்களோ, அது இந்தியாவுக்கு வரவே வராது என்று குறிப்பிட்டுள்ளார்.