முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Isha | மூளை பகுதியில் அறுவை சிகிச்சை..!! ஜக்கி வாசுதேவின் தற்போதைய நிலை என்ன..? வெளியான வீடியோ..!!

08:34 AM Mar 26, 2024 IST | Chella
Advertisement

மூளை பகுதியில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஜக்கி வாசுதேவ் வேகமாக குணமடைந்து வருகிறார். இந்நிலையில், அவர் செய்தித்தாள் படிப்பது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.

Advertisement

கோவை ஈஷா யோகா மையத்தின் நிறுவனரான சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தற்போது அவர் வேகமாக குணமடைந்து வருகிறார். அண்மைக் காலமாக ஜக்கி வாசுதேவுக்கு ஒற்றைத் தலைவலி இருந்ததாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்பாக வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, சிடி ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, அவரது மூளையில், ரத்தகசிவு இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில், ஜக்கி வாசுதேவ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தற்போது குணமடைந்து வருகிறார். ஜக்கி வாசுதேவ் நலமுடன் இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈஷா அறக்கட்டளை சார்பில் அறிவிக்கப்பட்டு வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில், சத்குரு ஜக்கி வாசுதேவின் சமூக வலைதள பக்கத்தில் மற்றொரு வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வரும் சத்குரு ஜக்கி வாசுதேவ், செய்தித்தாள் வாசித்து வருகிறார். இந்த 19 விநாடி கொண்ட வீடியோவை #SpeedyRecovery என்ற ஹேஷ்டேக்குடன் பகிரப்பட்டுள்ளது.

Read More : மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!! ஏராளமான பலன்கள் அறிவிப்பு..!! செம சர்ப்ரைஸ் காத்திருக்கு..!!

Advertisement
Next Article