’மிக்ஜாம்’ புயலால் உங்கள் வாகனம் சேதமடைந்துள்ளதா..? இழப்பீடு பெற சிறப்பு முகாம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டி போட்டது. இதன் காரணமாக பல்வேறு வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. குறிப்பாக மேடவாக்கம், வேளச்சேரி, முடிச்சூர், மேற்கு தாம்பரம் மற்றும் வட சென்னை உள்ளிட்ட பகுதிகள் முற்றிலும் சேதம் அடைந்தது. இதில், இரு சக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
பெரும்பாலான வாகனங்கள் மழை நீரில் சிக்கி இயங்க முடியாமல் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், வாகனங்களுக்கு காப்பீடு செய்யப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவதற்கான முகாமை தனியார் நிறுவனர்கள் தொடங்கியுள்ளது. அந்த வகையில், வாகனங்களுக்கான காப்பீட்டுத் திட்டங்களில் முழு காப்பீடு (காம்ப்ரஹன்சிவ்), 3-வது நபர் காப்பீடு என இரண்டு வகைகள் உள்ளன.
முழுக் காப்பீடு செய்திருந்தால் மட்டுமே சாலை விபத்து, தீ விபத்து, புயல், வெள்ளம், நிலநடுக்கம், திருட்டு ஆகியவற்றின்போது வாகன உரிமையாளர் இழப்பீடு கோர முடியும். இழப்பீடு கோரும்போது, வாகனம் எப்படி சேதமடைந்தது என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரத்துக்கான புகைப்படங்கள் தேவைப்படும். மேலும், காப்பீட்டு நிறுவனத்திடம் வாகனத்தின் சேதம் குறித்து தகவல் தெரிவிக்க தாமதப்படுத்தக் கூடாது. அதிகபட்சம் ஒரு வாரத்துக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும்.
இந்நிலையில், மிக்ஜாம் புயல் பாதிப்பால் சேதமடைந்த வாகனங்களுக்கு இழப்பீடு பெற 'தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்' நிறுவனர் சிறப்பு முகாம் நடத்தி வருகிறது. அந்த வகையில் அடையாறு, தாம்பரம், வேளச்சேரி, பூந்தமல்லி, அம்பத்தூர் மற்றும் புரசைவாக்கம் ஆகிய இடங்களில் உள்ள அலுவலகங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. எனவே, வாகனங்களுக்கு காப்பீடு செய்த பாலிசிதாரர்கள் இழப்பீடு கோருவதற்கு 71flood23@newindia.co.in என்ற மின்னஞ்சலில் தெரியப்படுத்தலாம்,
மேலும், www.newindia.co.in என்ற இணையதளத்தில் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என 'தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்' தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல பல்வேறு இன்சூரன்ஸ் நிறுவனங்களும் இழப்பீடு வழங்குவதற்கான சிறப்பு முகாம்களை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.