உங்கள் ஸ்மார்ட்போன் பாதுகாப்பா இருக்கா..? இந்த நம்பரை பயன்படுத்தி நீங்களே செக் பண்ணலாம்..!!
இந்த டிஜிட்டல் யுகத்தில் உங்கள் ஸ்மார்ட்போனை பாதுகாப்பது முக்கியமானது. எவ்வளவு முன்னோக்கி தொழில்நுட்பம் செல்கிறதோ அதன் எதிர்வினைகளுக்கு சமமாக இருக்கும். அதையும் கையாளும் வழிகள் நமக்கு தெரிந்திருக்க வேண்டும். தேசிய குற்றப் புலனாய்வுப் பணியகம், உங்கள் சாதனத்தைப் பாதுகாக்க 7 முக்கியமான ரகசியக் குறியீடுகளைப் பகிர்ந்துள்ளது. அதை பற்றி தான் இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம்.
இரகசியக் குறியீடுகளைப் பயன்படுத்துவது அதன் பாதுகாப்பை கணிசமாக மேம்படுத்துவதோடு, உங்களின் முக்கியத் தகவலை பாதுகாக்கும். தேசிய குற்றப் புலனாய்வுப் பணியகம், ஒரு சுயாதீன அரசு சாரா அமைப்பு (என்ஜிஓ) X இல் 7 ரகசிய குறியீடுகளின் பட்டியலைப் பகிர்ந்துள்ளது. "ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் ஃபோனின் ரகசிய குறியீடுகளை தெரிந்து கொள்ள வேண்டும். ஸ்மார்ட்போன்களின் ரகசிய குறியீடுகளின் பட்டியல் நீண்டதாக இருந்தாலும், சில முக்கியமான குறியீடுகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்" என தெரிவித்துள்ளது.
*#21#: இந்த ரகசிய குறியீட்டின் உதவியுடன், உங்கள் அழைப்பு, தரவு அல்லது எண் வேறு எந்த எண்ணுக்கு அனுப்பப்பட்டதா என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
#0#: இந்த ரகசிய குறியீட்டின் உதவியுடன், உங்கள் போனின் டிஸ்ப்ளே, ஸ்பீக்கர், கேமரா, சென்சார் சரியாக வேலை செய்கிறதா இல்லையா என்பதை கண்டுபிடிக்கலாம்.
##34971539##: இந்த குறியீட்டின் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனின் கேமரா தகவல்களை அறிந்து கொள்ளலாம். உங்கள் கேமரா சரியாக வேலை செய்கிறதா இல்லையா என்பதை தெரிந்துகொள்ளலாம்.
*#06 #: இந்த ரகசிய குறியீட்டின் உதவியுடன் உங்கள் IMEI எண்ணைக் கண்டறியலாம். தொலைபேசி தொலைந்து போனால் இந்த IMEI எண் தேவை.
*#07# : இந்த குறியீடு உங்கள் போனின் SAR மதிப்பைக் கூறுகிறது. அதாவது, போனில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு பற்றிய தகவல்களைப் பெறலாம். சாரம் மதிப்பு எப்போதும் 1.6-க்கும் குறைவாக இருக்க வேண்டும்.
##4636##: இந்த குறியீட்டைக் கொண்டு உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி, இணையம் மற்றும் வைஃபை பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.
2767*3855#: இந்த ரகசிய குறியீட்டை உங்கள் டயல் பேடில் டைப் செய்தால், அது உங்கள் ஸ்மார்ட்போனை ரீசெட் செய்யும். ரீசெட் செய்த பிறகு போனின் டேட்டா இழக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும். எனவே, தரவை எங்காவது சேமித்து பின்னர் டயல் செய்யுங்கள்.
Read More : மத்திய அரசின் வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம் பற்றி தெரியுமா..? அட 50% மானியமும் இருக்கு..!!