For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைக்கப்படுகிறதா..? வலுக்கும் கோரிக்கை..!! விரைவில் வெளியாகும் அறிவிப்பு..?

05:31 PM Jan 02, 2024 IST | 1newsnationuser6
டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைக்கப்படுகிறதா    வலுக்கும் கோரிக்கை     விரைவில் வெளியாகும் அறிவிப்பு
Advertisement

தென் மாவட்ட தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில், "மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட தேர்வர்களுக்கு, ஜனவரி 7ஆம் தேதி நடைபெறவிருந்த TRB தேர்வை பிப்ரவரி 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது போல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட தேர்வர்களுக்கு ஜனவரி 6, 7ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வையும் ஒத்திவைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக எடப்பாடி பழனிசாமி, “விடியா திமுக அரசு பொறுப்பேற்றவுடன் சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால்விலை உயர்வு, அரசின் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு என்று தமிழக மக்கள் வாட்டி வதைத்த நிலையில், தற்போது சொத்து வரி பெயர் மாற்றத்திற்காண கட்டணத்தை 20,000 ஆக உயர்த்த இந்த முடிவு செய்துள்ளதாக வந்த செய்தி மிகவும் கண்டனத்திற்குரியது.

நல்ல அரசு என்பது மக்களின் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்வதாக, மக்களுக்கு கிடைக்க வேண்டிய சான்றிதழ்கள், பத்திரங்கள், பெயர் மாற்றங்கள் போன்ற அரசின் நடைமுறைகள் குறைந்த கட்டணத்தில், எளிதில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். ஆகையால், சொத்துவரி பெயர் மாற்றம் செய்வதற்காண கட்டணத்தை உயர்த்தும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

Tags :
Advertisement