பர்சனல் கோபங்களை தீர்க்க விவாகரத்தின்போது இப்படியா செய்வது..? ஐடி ஊழியர் தற்கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் காட்டம்..!!
மனைவியின் தொல்லை, விவாகரத்து வழக்கு காரணமாக ஏற்பட்ட பொருளாதார இழப்பு, மனக்கஷ்டங்களால் பெங்களூரை சேர்ந்த 34 வயது ஐடி பொறியாளர் அதுல் சுபாஷ் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். அவரின் தற்கொலை நாட்டையே உலுக்கியுள்ளது. அதுல் சுபாஷ் தற்கொலைக்கு முன்பு, 24 பக்க குறிப்பை எழுதி உள்ளார். அதேபோல் கிட்டத்தட்ட 90 நிமிட வீடியோவைப் பதிவு செய்து சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். அதில், தனது மனைவி நிகிதா சிங்கானியா மீது கடுமையான புகார்களை வைத்துள்ளார்.
அசெஞ்சர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து கை நிறைய சம்பாதிக்கும் தனது மனைவி, தன்னிடம் விவாகரத்திற்கு பின் ரூ.4 லட்சம் பராமரிப்பு கேட்டார். எனது உறவினர்கள் மீதும் எனது குடும்பத்தினர் மீதும் பொய் வழக்குகளைப் பதிவு செய்தார். எங்களின் 4 வயது மகனுக்கும் பராமரிப்புத் தொகையாக மாதம் ரூ.2 லட்சம் கொடுக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. அதுல் சுபாஷின் விவாகரத்து வழக்கில் உத்தரப்பிரதேசத்தின் ஜான்பூரில் நடந்து வந்தது.
இந்நிலையில்தான், திருமணம் ஆன பெண்ணுக்கு தற்கொலை செய்து கொள்ளும்படி தூண்டுதல் அல்லது கொடுமை படுத்துதல் அல்லது உயிருக்கு, உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய ஒரு செயலை செய்யும் கணவர் அல்லது குடும்பத்தினருக்கு எதிரான சட்ட பிரிவுதான் 498A. இந்த சட்டப்பிரிவு 498A-வை பெண்கள் பலரும் தவறாக பயன்படுத்துவதாக உச்சநீதிமன்றம் வருத்தம் தெரிவித்துள்ளது.
பெண்களை குடும்ப வன்முறை மற்றும் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்ட சட்டம் தான் இது. ஆனால், இந்த சட்டத்தை சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர். மனைவிமார்கள் தங்கள் கணவர்களை வழிக்கு கொண்டு வர, விவகாரத்தின் போது தங்களுக்கு வேண்டியதை சாதித்துக் கொள்ள இந்த சட்டப்பிரிவு பயன்படுத்தப்படுகிறது. தங்களுக்கு இருக்கும் பர்சனல் கோபங்களை தீர்க்க இந்த சட்டத்தை சில பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர்.
கணவன் மற்றும் அவனது குடும்பத்திற்கு எதிராக தனிப்பட்ட வகையில் பழிவாங்கும் விதமாக இந்த சட்டத்தை பெண்கள் பலர் பயன்படுத்துகின்றனர். தங்களுக்கு இருக்கும் பர்சனல் ஆத்திரங்களை தீர்க்க இந்த சட்டத்தை சில பெண்கள் தவறாக பயன்படுத்துவதாக நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் தெரிவித்தனர்.
Read More : ரிசர்வ் வங்கியில் புதிய மாற்றமா..? ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்ட சஞ்சய் மல்ஹோத்ரா பேட்டி..!!