ஹெட் மாஸ்டர் பாக்குற வேலையா இது..? வாழ்த்து சொல்ல வந்த மாணவர்களிடம் அத்துமீறிய தலைமை ஆசிரியர்..!! கடைசியில் இதுதான் கதி..!!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பிஎஸ்கே பார்க் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இவர் தற்போது, பணியிட மாறுதல் பெற்று ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்ற் வருகிறார். இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கடந்த சில நாட்களுக்கு முன் மாணவர்களுக்கு கேக் கொடுத்துள்ளார்.
மேலும், விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்ட நிலையில், கடந்த 2ஆம் தேதி தலைமை ஆசிரியர் ராஜேஷுக்கு மாணவர்கள் வாழ்த்து கூறியுள்ளனர். அப்போது, இரண்டு பிளஸ் 1 மாணவர்களுக்கு ஆசிரியர் ராஜேஷ் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் மாணவர்கள் புகாரளித்துள்ளனர். இது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர், குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராஜேஷ் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ராஜேஷைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். இதையடுத்து அவரை, ஜனவரி 21ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர், அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.