ஆண்கள், தங்களை விட வயதில் மூத்த பெண்களை விரும்புவதற்கு இது தான் காரணமா..!
ஈர்ப்பு என்பது மிகவும் தனிப்பட்ட அனுபவமாகும். எதிர்பாலினங்கள் மீது ஈர்ப்பு ஏற்படுவது என்பது இயற்கையான ஒன்று. இளம் வயதில் ஆண்கள் மீது பெண்கள், பெண்கள் மீது ஆண்கள் ஈர்ப்பு கொள்வதும் இயல்பான ஒன்று என்றாலும், சில ஆண்கள் தங்களை விடை வயது அதிகம் உள்ள பெண்கள் மீது ஈர்ப்பு கொள்கின்றனர். இதற்கு என்ன காரணமா என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
முதிர்ச்சி: பல ஆண்கள் வயதான பெண்களிடம் ஈர்க்கப்படுவதற்கு முதிர்ச்சி ஒரு முக்கிய காரணமாகும். வயதில் மூத்த பெண்கள், பெரும்பாலும் கடினமான சூழ்நிலைகளை கூட எளிதாக சமாளிக்கும் திறன், சுதந்திரமாக முடிவெடுக்கும் திறன், சிறிய பிரச்சினைகளை அதிகரிக்காமல் பக்குவமாக செயல்படுவது போன்றவைகளால் ஈர்க்கப்டுகின்றனர்.
மன முதிர்ச்சி: ஆண்கள் பெரும்பாலும் தங்கள் மன முதிர்ச்சியின் காரணமாக வயதான பெண்களிடம் ஈர்க்கப்படுகிறார்கள். வெளிப்படையாக பிரச்சினைகளை விவாதிக்கும் மற்றும் வாழ்க்கையின் சவால்களை தெளிவான அணுகுமுறையுடன் கையாளும் திறன் கொண்ட பெண்களை, ஆண்கள் மதிக்கிறார்கள், இந்த மனமுதிர்ச்சி இருவருக்கும் இடையே ஒத்துப்போவதால் ஈர்க்கப்படுகிறார்கள்.
தன்னம்பிக்கை: தன்னம்பிக்கை கொண்ட ஆண்கள் பொதுவாக தங்களை விட வயதில் மூத்த பெண்களுடன் டேட்டிங் செல்வதற்கு விருப்படுகிறார்கள். தங்களைவிட வயதில் மூத்த பெண்களுடன் டேட்டிங் செல்வதை, சாதாரண விருப்பமாக பார்க்கிறார்கள். அத்தகைய ஆண்கள் பாதுகாப்பாக உணர்கின்றனர். மேலும் சமூக எதிர்பார்ப்புகளுக்கு இணங்க வேண்டிய அவசியத்தை உணர மாட்டார்கள்.
சுதந்திரம்: பொதுவாக சுதந்திரமாக இருக்கும் ஆண்கள் தங்களைப் போல சுதந்திரமாக இருக்கும் பெண்களை அதிகம் விரும்புகின்றனர். சுதந்திரமாக முடிவெடுக்கும் பெண்களை பாராட்டும் இந்த ஆண்கள், தங்களைப்போலவே தன்னம்பிக்கையும், தன்னிறைவும் கொண்ட பெண்களால் அதிகம் ஈர்க்கப்டுகிறார்கள்.
திறந்த மனப்பான்மை: நவீன, திறந்த மனதுடன் வாழ்க்கை முறையை வழிநடத்தும் ஆண்கள் பெரும்பாலும் மூத்த பெண்களிடம் ஈர்க்கப்படுகிறார்கள். இந்த ஆண்கள் புதிய அனுபவங்களை ஏற்றுக்கொள்வதற்கும் மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதற்கும் ஆர்வமாக உள்ளனர். பாரம்பரியக் கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்படாமல், வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைப் பற்றிப் பேசத் தயாராகவும், வெளிப்படையாக இருக்கும் பெண்கள் மீது இத்தகைய ஆண்கள் ஈர்க்கப்படுகிறார்கள்.
உணர்ச்சி நுண்ணறிவு: உறவுகளை நிர்வகிப்பதற்கும் மோதல்களைத் தீர்ப்பதற்கும் திறமையான ஆண்கள் பெரும்பாலும் உணர்ச்சிகளை புத்திசாலித்தனமாக கையாளும் திறன் காரணமாக தன்னை விட வயது அதிகம் உள்ள பெண்களிடம் ஈர்க்கப்படுகிறார்கள். தங்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளக்கூடிய மற்றும் முற்றிலும் விமர்சன ரீதியாக அல்லாமல் சிந்தனைமிக்க கண்ணோட்டத்தில் பிரச்சினைகளை அணுகக்கூடிய பெண்களை ஆண்கள் மதிக்கிறார்கள்.
மரியாதை: எந்தவொரு உறவிலும் மரியாதை முக்கிய பங்கு வகிக்கிறது, தங்களை விட வயதில் மூத்த பெண்கள் மரியாதைக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் ஈர்க்கப்படுகிறார்கள். இந்த பெண்கள் மற்றவர்களை மரியாதையுடன் நடத்துகிறார்கள், மேலும் மோதல்களை அமைதியான மற்றும் நியாயமான அணுகுமுறையுடன் அணுகுகிறார்கள், மோதலுக்குப் பதிலாக விவாதத்தின் மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த மரியாதையான நடத்தை தங்களை விட வயதில் மூத்த பெண்கள் மீதான ஈர்ப்பை மேலும் அதிகப்படுத்துகிறது.
Read More: ஒருநாளைக்கு எத்தனை முறை டீ குடிக்கிறீங்க..? சுகாதாரத்துறை நிபுணர்களின் எச்சரிக்கையை பாருங்க..!!