For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’இதுதான் ஆய்வு நடத்திய லட்சணமா’..? ’அமைச்சரை உடனே பதவி நீக்கம் செய்க..!! முதல்வருக்கு கேள்வி எழுப்பிய அண்ணாமலை..!!

Annamalai said that the Chief Minister's only moral duty would be to sack the minister for liquor control and ayathirva without further delay.
04:21 PM Jun 22, 2024 IST | Chella
’இதுதான் ஆய்வு நடத்திய லட்சணமா’    ’அமைச்சரை உடனே பதவி நீக்கம் செய்க     முதல்வருக்கு கேள்வி எழுப்பிய அண்ணாமலை
Advertisement

இனியும் தாமதிக்காமல், மது ஒழிப்பு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சரைப் பதவி நீக்கம் செய்வதுதான், முதலமைச்சரின் ஒரே தார்மீகக் கடமையாக இருக்கும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திமுக அரசின் நடவடிக்கையால் கள்ளச்சாராயம் காய்ச்சுவதும் விற்பதும் வெகுவாக குறைந்து விட்டதாக, தனக்குத் தானே பாராட்டு பத்திரத்தை வாசித்துக் கொண்டிருந்ததோடு மட்டுமல்லாமல், வாரம் தோறும் ஆய்வுகள் நடத்தப்படும் என்று வீண் விளம்பரமும் செய்திருந்தார் முதல்வர் ஸ்டாலின்.

இவர்கள் நடத்திய ஆய்வின் லட்சணம்தான், கள்ளச்சாராயத்தால் இன்று 55 உயிர்களைப் பறிகொடுத்துள்ளோம். இத்தனை நடந்த பின்னரும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கள்ள மௌனம் காத்து வருகிறார் முதல்வர். திமுகவின் நிர்வாகத் திறமையின்மையை எதிர்த்துப் போராட்டம் நடத்தி வரும் எங்கள் சகோதர, சகோதரிகளைக் கைது செய்து முடக்குவதில் காட்டும் அக்கறையைச் சிறிதேனும், கள்ளச்சாராய ஒழிப்பில் காட்டியிருந்தால், பல குடும்பங்கள் இன்று ஒரே நாளில் நடுத்தெருவுக்கு வந்திருக்காது.

இனியும் தாமதிக்காமல், மது ஒழிப்பு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சரைப் பதவி நீக்கம் செய்வதுதான், முதலமைச்சரின் ஒரே தார்மீகக் கடமையாக இருக்கும். செய்வாரா திரு @mkstalin..? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Read More : முன்கூட்டியே உங்கள் பிரச்சனையை உணர்த்தும் அறிகுறிகள்..!! உஷாரா இருங்க மக்களே..!!

Tags :
Advertisement