உடலில் இருக்கும் ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் இந்த ஒரு இலை தீர்வு தருமா..? இனி யாரும் தனியா எடுத்து வைக்காதீங்க..!!
பச்சை கறிவேப்பிலையை தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், நமது உடலில் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை சாப்பிட்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம். மேலும் இரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை சேர்த்து சாப்பிட்டு வந்தால், இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும். குறிப்பாக, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.
மேலும், கறிவேப்பிலை உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்களை கரைத்து, நல்ல கொழுப்புக்களை அதிகரிக்க உதவுகிறது. இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும். நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருகிறீர்கள் என்றால், வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் ஓடிவிடும்.
மேலும், கறிவேப்பிலையை தினமும் சிறிது சாப்பிட்டு வர, முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தையும், முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள். மேலும், கல்லீரல் பாதிப்பு இருப்பவர்கள் கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.