இந்த அளவுக்கு கோபமா?… இந்தியாவிடம் கெஞ்சும் மாலத்தீவு அமைச்சர்!
Maldiv: மாலத்தீவு பொருளாதார ரீதியாக சரிவை சந்தித்து வருகிறது. எனவே, இந்தியர்கள் எங்கள் நாட்டிற்கு வர வேண்டும் என அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய மக்கள் மற்றும் பிரதமர் மோடிக்கு எதிரான மாலத்தீவு அதிபரின் பிடிவாதமும், அமைச்சர்களின் சர்ச்சை பேச்சுகளுக்கு மத்தியில் சமீபக்காலமாக இந்திய மக்கள் மாலத்தீவிற்கு சுற்றுலா செல்ல புறக்கணித்து வருகின்றனர். மாலத்தீவில் அதிபர் ஆட்சியே நடைமுறையில் இருந்து வரும் நிலையில், சென்ற ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றிபெற்று, முய்சு அதிபராகப் பதவியேற்றார். முகமது முய்சு மாலத்தீவு அதிபராகப் பதவியேற்றதிலிருந்தே இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே மோசமான உறவு இருந்து வருகிறது. இந்தியாவுக்கு எதிரான அவரது முடிவுகள், மாலத்தீவின் உயர் அதிகாரிகளுக்குக் கூட பிடிக்கவில்லை.
குறிப்பாக, 2021ம் ஆண்டின் கணக்குப்படி இந்தியா மாலத்தீவுக்கு கொடுத்த விமானங்களை இயக்க 70 இந்தியர்கள் அங்கு சென்றனர். மூய்சு பதவியேற்பதற்கு முன் முதலில் கூறியது, அனைத்து இந்திய படைகளும் வெளியேற வேண்டுமென்றுதான். மூய்சின் தேர்தல் பிரச்சாரம் கூட மாலத்தீவில் இந்திய செல்வாக்கைக் குறைப்பது பற்றித்தான் அதிகம் இருந்தது. இதனால் சிலர் இவர் சீனாவின் ஆதரவாளர் என்றும் கூறினர்.
இதனால் அவருக்கு உள்ளூரிலேயே எதிர்ப்புகள் கிளம்பின. சமீபத்தில் கூட முய்சுவின் மீது மிகப் பெரிய ஊழல் புகார் ஒன்று எழுந்தது. இதனால், அவர் பதவியிலிருந்தே கூட நீக்கப்படலாம் என்று கூறப்பட்டது.
இந்திய பிரதமர் நரேந்திர மோதி மாலத்தீவுக்கு சென்று அந்தப் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டார். மாலத்தீவு அமைச்சர்கள் சிலர் பிரதமர் மோதி குறித்த அவதூறான கருத்துக்களைப் பதிவிட்டனர். அதன்பிறகு இந்தியாவில் அது ஒரு பேசுப்பொருளாக மாறியது. இதனால், இந்திய மக்களும் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை முழுவதுமாக நிறுத்திவிட்டனர். சிலர் அந்த சமயத்தில் ஹோட்டல் புக் செய்ததை எல்லாம் கூட ரத்து செய்தனர். அந்த அளவிற்கு மோசமான எதிர்ப்புகளை இந்திய மக்கள் தெரிவித்தனர்.
தற்போது இதுகுறித்து மாலத்தீவு சுற்றுலாத்துறை அமைச்சர் இப்ராஹிம் பைசல் கூறுகையில், "இரு நாடுகளுக்கும் இடையே ஒரு வரலாற்றுப் பிணைப்பு இருக்கிறது. எங்கள் அரசு இந்தியாவுடன் இணைந்துப் பணியாற்றவே விரும்புகிறது. நாங்கள் எப்போதும் அமைதி மற்றும் நட்புச் சூழலையே மேம்படுத்த விரும்புகிறோம். மாலத்தீவு அரசும், மாலத்தீவு மக்களும் இந்தியச் சுற்றுலாப் பயணிகளை எப்போதும் அன்புடன் வரவேற்பார்கள்.
இந்தியர்கள் தயவு செய்து மாலத்தீவு நாட்டிற்குச் சுற்றுலாவுக்கு வாருங்கள். மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சராக எனது கோரிக்கை இதுதான். ஏனென்றால், எங்கள் நாட்டின் பொருளாதாரம் சுற்றுலாவை நம்பியே இருக்கிறது என்றார்.
Readmore: நாளை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு…! இணையதளங்கள் அறிவிப்பு!!