கடனை வசூலிக்க சென்றவருக்கு இப்படி ஒரு நிலைமையா..? வீட்டிற்குள் வெறியோடு காத்திருந்த பெண்கள்..!! கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் தேவப்பிரியன். இவரது மகன் லட்சுமணன் (35). இவர், பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர், சூர்யா என்பவருக்கு தொழில் நிமித்தமாக கடன் கொடுத்துள்ளார். பணத்தை லட்சுமணன் திருப்பி கேட்டபோது, கோவைக்கு வந்து நேரில் பெற்றுக் கொள்ளுங்கள் என்று பீளேட்டில் உள்ள சூர்யா கூறியுள்ளார்.
இதையடுத்து, லட்சுமணன் பாளையங்கோட்டையில் இருந்து பணம் வாங்குவதற்காக கோவைக்கு வந்துள்ளார். அங்கு, ஹோப் காலேஜ் பஸ் ஸ்டாப் அருகே நின்று கொண்டு சூர்யாவை செல்போனில் அழைத்திருக்கிறார். உடனே சூர்யா அந்த பகுதிக்கு வந்து அவரை அழைத்துக் கொண்டு ஒரு வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு 2 அழகிகள் இருந்துள்ளனர். அந்த அழகிகளை காட்டி லட்சுமணனுக்கு ஆசையை தூண்டியுள்ளார் சூர்யா. பின்னர், அழகிகள் உல்லாசத்திற்கு அழைத்த நிலையில், இதை சுதாகரித்துக் கொண்ட லட்சுமணன் அங்கிருந்து ஒருவழியாக தப்பித்து ஓடியுள்ளார்.
பின்னர், நடந்த சம்பவத்தை கூறி கோவை பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனே பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்றனர். இதையறிந்த, சூர்யா மற்றும் அவரது பங்குதாரர் ஜெபின் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். இதைத் தொடர்ந்து போலீசார் அங்கிருந்த 2 அழகிகளையும் மீட்டனர். தப்பியோடிய சூர்யா, ஜெபின் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Read More : அரபிக் கடலில் இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி..? இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தகவல்..!!