’தங்கலான்’ படம் பார்க்க போன இடத்துல இப்படி ஒரு சம்பவமா..? டிக்கெட் கட்டணத்தை திருப்பிக் கொடுத்த தியேட்டர் நிர்வாகம்..!!
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் நேற்று (ஆகஸ்ட் 15) உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் தான் தங்கலான். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இத்திரைப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.25 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் மட்டும் ரூ.17 கோடிக்கு வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தங்கலான் திரைப்படம் தூத்துக்குடி மாநகரில் மட்டும் 4 திரையரங்குகளில் திரையிடப்பட்டது. இதில், புதிதாக சீரமைத்துக் கட்டப்பட்ட திரையரங்கமான கிளியோபட்ரா திரையரங்கில் காலை 9.30 மணி காட்சி திரையிடப்பட்டது. படத்தினைப் பார்த்த ரசிகர்கள், படத்தின் ஆடியோ சரியாக கேட்கவில்லை எனக் கூறி தியேட்டர் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.
இதையடுத்து, திரையரங்க நிர்வாகிகளிமுடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. படத்தினைப் பார்க்க இரண்டு நாட்களுக்கு முன்னர் இருந்தே ரசிகர்கள் டிக்கெட் புக் செய்து காத்திருந்தனர். இப்படியான நிலையில் படத்தின் ஆடியோ சரியாக கேட்காததால் படத்தின் டிக்கெட்டிற்கு வாங்கிய தொகையை திரும்பக் கேட்டு ரசிகர்கள் முறையிட்டுள்ளனர். இதனால் திரையரங்கத்தினரும் வேறு வழியின்றி, படத்திற்கான டிக்கெட் கட்டணத்தை திரும்பக் கொடுத்துள்ளனர்.
Read More : ஒரே நாளில் ’தங்கலான்’ திரைப்படம் வசூலித்தது எவ்வளவு தெரியுமா..? தமிழ்நாட்டில் மட்டுமே இத்தனை கோடியா..?