இவ்வளவு மலிவு விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரா..? இத்தனை வசதிகள் இருக்கா..? பேட்டரி தான் ஹைலெட்..!!
லித்தியம் ஃபெரோ பாஸ்பேட் பேட்டரியுடன் மலிவு விலையில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை கோமாகி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜப்பானைச் சேர்ந்த முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான கோமாகி இந்திய சந்தையில் எம்ஜி ப்ரோ என்கிற ஈ-ஸ்கூட்டரை அதுவும் மலிவு விலையை அறிமுகம் செய்துள்ளது. ஸ்கூட்டர் 3 ஆண்டுகள் வாரண்டி, மோட்டார், பேட்டரி மற்றும் கன்ட்ரோலர் ஆகியவற்றுக்கு 30,000 கிமீ ஓட்டத்துடனான வாரண்டியுடன் வருகிறது.
எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களில் நன்கு அறியப்பட்ட பெயரான கோமாகி நிறுவனம் சமீபத்தில் லித்தியம் பேட்டரியுடன் கூடிய கோமாகி எம்ஜி ப்ரோ மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ‘ஹர் கர் கோமாகி’ திட்டத்தின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர் எக்ஸ் ஷோரூம் விலையில் ரூ.59,999-க்கு விற்பனையாகிறது.
இந்த ஸ்கூட்டர் 2.2 kW கிலோவாட் மற்றும் 2.7 kW கிலோவாட்டுடன் கூடிய LiFePO4 பேட்டரியைக் கொண்டுள்ளது. இது ஈர்க்கக்கூடிய வகையில், 150 கிமீ வரையிலான நீண்ட பயண வரம்பை வழங்குகிறது. மக்களின் வசதிக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர், தானாக பழுதுபார்க்கும் செயல்பாட்டை கொண்டுள்ளது. மின்சார வாகனங்களின் மேம்பட்ட அம்சங்களை வழங்கும் இந்த புதிய அறிமுகத்தின் மூலம், கோமாகி இந்திய குடும்பங்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்றும் மக்களின் அன்றாட பயணத்திற்கு ஏற்ப புதுமையான நடைமுறைக்கு ஏற்ற மற்றும் நிலையான தீர்வுகளை கோமாகி கொண்டு வருகிறது என்று அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் திருமதி குஞ்சன் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
Read More : விவசாயிகளுக்கு செம குட் நியூஸ்..!! 50% மானியத்தில் மின் மோட்டார்கள்..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?