For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இப்படியொரு பாரம்பரியமா?… 13 நாட்கள் கழித்து புத்தாண்டை கொண்டாடிய மக்கள்!… எந்த நாட்டில் தெரியுமா?

11:30 AM Jan 14, 2024 IST | 1newsnationuser3
இப்படியொரு பாரம்பரியமா … 13 நாட்கள் கழித்து புத்தாண்டை கொண்டாடிய மக்கள் … எந்த நாட்டில் தெரியுமா
Advertisement

பிரித்தானியா நாட்டில் உள்ள கிராம மக்கள் 13 நாட்கள் கழித்து புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். நூற்றாண்டுகள் கடந்தும் பழமையான பாரம்பரியத்தின் அடிப்படையில் புத்தாண்டு கொண்டாடப்பட்டுள்ளது.

Advertisement

பெம்ப்ரோக்ஷயரில்(Pembrokeshire) உள்ள குவான் பள்ளத்தாக்கில்(The Gwaun Valley) வசிக்கும் 300 மக்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் பாரம்பரியத்தின் படி Hen Galan என்று அழைக்கப்படும் பழைய புத்தாண்டு முறையின் படி, ஜனவரி 13ம் திகதி புத்தாண்டை கொண்டாடி வரவேற்கின்றனர். இந்த மக்களின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இனிப்புகள் மற்றும் பணத்திற்காக குழந்தைகள் வீடு வீடாக சென்று பாடல்களை பாடும் வழக்கத்தை கொண்டுள்ளனர், இதனை இவர்கள் “hel calennig” என்று அழைக்கின்றனர்.

இந்த பாரம்பரியம் தொடர்பாக ஒய் லியன் க்வின்(Y Llien Gwyn) என்ற உள்ளூர் செய்தித்தாளின் ஆசிரியர் போனி டேவிஸ்(Bonni Davies) வழங்கிய தகவலில், இந்த சமூகத்தினரின் புத்தாண்டு கொண்டாட்டம் ஜூலியன் நாட்காட்டியை பின்பற்றி கொண்டாடப்படுகிறது. பெரும்பாலான உலகத்தினரால் கிரிகோரியன் நாட்காட்டி (Gregorian calendar-கிரேக்க நாட்காட்டி) பின்பற்றப்பட்டு வருகிறது. பழைய காலண்டரின்(ஜூலியன் நாட்காட்டி) அடிப்படையில் ஜனவரி 13ம் திகதி புத்தாண்டு கொண்டாட்டத்தை நடத்த குவான் பள்ளத்தாக்கு மக்கள் முடிவெடுத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். 1752ம் ஆண்டு பிரித்தானியா அதிகாரப்பூர்வமாக கிரிகோரியன் நாட்காட்டி ஏற்றுக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement