"சந்தனம், குங்குமத்தை நெற்றியில் வைப்பதற்கு இப்படி ஒரு காரணமா"..? இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!
விபூதி, குங்குமம் போன்றவற்றை சாமிக்கு படைத்து விட்டு ஏன் நெற்றியில் வைக்கிறோம் என்று தெரியுமா? சம்பிரதாயம் என்ற பெயரில் நமது முன்னோர்கள் இந்த செயலில் மறைத்து வைத்துள்ள அறிவியலை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
என்னதான் ஆடை, அணிகலன்களை கொண்டு பெண்கள் தங்களை அலங்காரம் செய்து கொண்டாலும் ஒரு சின்ன நெற்றிப்போட்டு இல்லையென்றால் அந்த அலங்காரம் முழுமைப் பெறாது. எதற்காக பெண்கள் நெற்றியின் மத்தியில் பொட்டு வைக்கிறார்கள் அழகுக்காக மட்டும் அல்ல. நம் உடலின் அனைத்து நாடி நரம்புகளும் மூளையுடன் இணைக்கப்பட்டவை. உடலின் அநேக நரம்புகள் நெற்றிப் பொட்டின் வழியாகத்தான் செல்கின்றன. அதனால் நெற்றிப் பகுதியில் எப்போதும் அதிக உஷ்ணமாகவே இருக்கும்.
நமது அடிவயிற்று பகுதிக்கு நெருப்பின் சக்தி இருந்தாலும், அந்த சூட்டின் தாக்கம் அதிகமாக உணரப்படுவது நெற்றிப் பொட்டில்தான். அதனால்தான் காய்ச்சல் என்றால் முதலில் நெற்றியில் கைவைத்து உஷ்ணத்தின் தன்மையை அறிகிறார்கள். வாகனங்களின் எஞ்சின் தொடர்ந்து இயங்கும்போது அதிகம் சூடாகும். இந்த சூட்டைக் குறைத்து எஞ்சினுக்கு அதிக ஆயுளைக் கொடுப்பது ரேடியேட்டர்தான். அதுபோல நமது மூளையையும், அதை இணைக்கும் நரம்புகளையும் குளிரச் செய்வதே நாம் நெற்றியில் பூசும் சந்தனம் போன்றவை செய்கின்றன.
தலையில் ஏற்படும் வியர்வை, தலை மேல் விழும் பனித்துளிகள் மற்றும் தண்ணீர் போன்றவற்றின் சிறுபகுதி கெட்டிப்பட்டுத் தலைப்பகுதியில் தங்கிவிடும். இதனால் தலைவலி, தூக்கமின்மை ஏற்படும். இந்த பிரச்சனைகளை ஏற்படுத்தும் கெட்ட நீரை நெற்றியில் வைக்கும் விபூதியானது உறிஞ்சி வெளியேற்றும் தன்மை கொண்டது. இதுவே நெற்றியில் விபூதி கொள்வதற்கான நோக்கமாகும். நெற்றிப்பகுதியில் அதிகளவில் சூடு ஏறுவதால் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. கிருமித் தொற்றைத் தடுக்கவே மஞ்சள். அதிலிருந்து தயாரிக்கப்படும் குங்குமம், சந்தனம், விபூதி ஆகிய மூன்றும் சிறந்த கிருமிநாசினி. ஆனால், பெண்கள் காலப்போக்கில் அவற்றை ஒதுக்கி வைத்து விட்டு ஸ்டிக்கர் பொட்டையே பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர்.
நம் முன்னோர்கள் எந்த ஒரு செயலை செய்யச் சொன்னாலும் காரணம் இல்லாமல் செய்திருக்க மாட்டார்கள். சம்பிரதாயங்கள் என்ற பெயரில் அனைவரும் மருத்துவ முறைகளை அழகாகவும், மறைமுகமாகவும் கடைபிடித்து வந்துள்ளனர். ஸ்டிக்கர் பொட்டு உடல்நலனுக்குக் கேடு விளைவிக்கும். அதில் தடவ படும் ஒட்டும்பசை ரசாயனத்தால் ஆனது. இது நெற்றியில் எரிச்சலை ஏற்படுத்துவதுடன் சூரிய ஒளியை நெற்றிப் பொட்டில் விழுவதைத் தடுக்கிறது. கண் மற்றும் புருவங்களுக்கு ஸ்டிக்கர் பொட்டு பெரிதும் ஆபத்தானது. எனவே, குங்குமம், சந்தனம், விபூதியின் பயன்களை அறிந்து தினமும் ஆண்கள், பெண்கள் என அனைவரும் நெற்றியில் இட்டுக்கொண்டால் உடல் நலத்திற்கு நல்லது.
Read More : IOB வங்கியில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..? விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க..!!