For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இப்படி ஒரு விஷயம் இருக்கா..? இந்த சட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

10:44 AM May 03, 2024 IST | Chella
லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இப்படி ஒரு விஷயம் இருக்கா    இந்த சட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா
Advertisement

லிவின் ரிலேஷன்ஷிப் நீண்ட காலமாக இருந்து வந்தாலும், இந்தியாவில் சமீப ஆண்டுகளாக பிரபலமாகி வருகிறது. எனினும் இது குறித்த குழப்பங்கள் மக்களிடையே தொடர்ந்து நீடித்து வருகிறது. பொதுமக்களுக்கு இருக்கக்கூடிய குழப்பங்கள் மட்டுமல்லாமல், லிவின் ரிலேஷன்ஷிப்பில் ஈடுபட்டிருக்க கூடிய தம்பதிகளுக்கும் இது பற்றியான சரியான புரிதல் இல்லாமல் இருக்கிறது. லிவின் ரிலேஷன்ஷிப் தொடர்பான ஒரு சில சட்டங்கள் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

Advertisement

ஆம், உண்மைதான். உத்தரகாண்டில் யூனிபார்ம் சிவில் கோட் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து விஷயங்கள் தலைகீழாக மாறிப்போனது. லிவின் ரிலேஷன்ஷிப்பில் ஒரு தெளிவை கொண்டு வருவதற்கான மைல்கல்லாக இது அமைகிறது. இந்த சட்டம் அமலுக்கு வந்தால் லிவின் ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்கள் ஒரு மாத காலத்திற்குள் அதனை பதிவு செய்வது கட்டாயம் ஆக்கப்படும். இந்த சட்டபூர்வமான அங்கீகாரம் என்பது எண்ணிக்கைக்காக மட்டுமல்லாமல், தனி நபர்களின் உரிமைகளை பாதுகாப்பதையும் உறுதி செய்கிறது.

உத்தர்காண்ட் மாநிலத்தில் வெளியிடப்பட்ட விதிக்கு அப்பாற்பட்டு லிவின் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் நபர்கள் ஒரு சில உரிமைகளையும், பாதுகாப்புகளையும் சட்டத்தின் கீழ் கொண்டிருக்கின்றனர். உதாரணமாக லிவின் ரிலேஷன்ஷிப் மூலமாக பிறக்கும் குழந்தைகள் இதற்கு முன்னர் சமூகத்திற்கு முறைகேடாக கருதப்பட்டனர். ஆனால், உச்சநீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பின் விளைவால் லிவின் ரிலேஷன்ஷிப் மூலமாக பிறக்கும் குழந்தைகளுக்கும் சொத்தில் சட்டபூர்வமான பங்கு உண்டு என தெரிவிக்கப்பட்டது. 1978இல் உச்சநீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்புக்குப் பிறகு லிவின் ரிலேஷன்ஷிப் செல்லுபடி ஆகும் என்று முதல் முறையாக அறிவிக்கப்பட்டது.

லிவின் ரிலேஷன்ஷிப்பில் ஈடுபட்டுள்ள இருவரின் மனப்பூர்வமான சம்மதம், மன உறுதி, சட்டத்திற்கு உட்பட்டு திருமண வயதை அடைதல் போன்றவற்றின் அடிப்படையில் இவர்களது உறவு சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படும். மேலும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தம்பதியராக வாழ்ந்தவர்களும் திருமணம் ஆனவர்களாகவே கருதப்படுவார்கள். பெண்களுக்கான சட்டத்தைப் பற்றி பேசும்போது, குற்றவியல் நடைமுறை சட்டத்தின் அடிப்படையில் ஒரு பெண்ணுக்கு முறையான பராமரிப்பு வழங்க முடியாத எந்த ஒரு ஆணும் குற்றவாளி ஆக்கப்படலாம். பெண்கள் மற்றும் குடும்ப வன்முறை சட்டம் 2005 இன் படி, லிவின் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் பெண்களுக்கு சில பொருளாதார உரிமைகள் வழங்கப்படுகிறது.

ஒரு சில வருடங்கள் ஆணுடன் உறவில் ஏற்படும் ஒரு பெண்ணுக்கு மனைவி என்ற அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று அக்டோபர் 2008ஆம் ஆண்டு மகாராஷ்டிரா அரசு பரிந்துரை செய்தது. இது சம்பந்தமாக பல்வேறு வழக்குகளின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளை பொறுத்து நியாயமான காலம் எது என்பது தீர்மானிக்கப்பட வேண்டும். பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், நியாயமான காலத்திற்கு கணவன், மனைவியாக லிவின் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்தாலும் அந்த ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாக கருதப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அமைத்த நீதிபதி மலிமத் கமிட்டி மூலம் தீர்ப்பளிக்கப்பட்டது.

2009 ஆம் ஆண்டு நடந்த ஒரு வழக்கில் Cr. PC. யின் 125 ஆவது பிரிவின் படி, ஒரு பெண் தன்னுடைய பராமரிப்புக்காக முறையான திருமணத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை என்று தீர்ப்பு வழங்கியது. மேலும், 21 வயதை அடைந்த பெண் மேஜர் என்பதால் ஒரு ஆணை திருமணம் செய்து கொள்ளாமல் அவருடன் வாழ்வதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு என்பதையும் தீர்ப்பளித்தது. இறுதியில் லிவின் ரிலேஷன்ஷிப்பில் கணிசமான காலம் வாழக்கூடிய ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாக கருதப்படுவார்கள். அவர்களுக்கு பிறந்த குழந்தையும் முறையான குழந்தையாக கருதப்படும்.

Read More : வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய கமல்ஹாசன்..!! தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு புகார்..!!

Advertisement