இன்று இரவு 12 மணி முதல் பிறக்கும் குழந்தைகள் "ஜென் பீட்டா" தலைமுறையினர்..! என்ன காரணம்..! முழு விவரம்..!
Gen-Beta: 2025 ஜனவரி 01 முதல் Gen-Beta என்ற புதிய தலைமுறை உருவாக உள்ளது. 2025 முதல் 2039 வரை பிறப்பவர்கள் ஜென் பீட்டா என்று அழைக்கப்படுவர்.
இந்த தலைமுறையினர் பெரும்பாலும் Gen Alpha மற்றும் Gen Z-க்களின் வாரிசுகளாக இருப்பர் என்று கணிக்கப்பட்டுள்ளது. 1998 முதல் 1996 வரை பிறந்தவர்கள் மில்லினியல்கள் என்றும், 1996 முதல் 2010 ஆம் வரை பிறந்தவர்கள் Gen Z என்றும் 2010 முதல் 2024இற்கு இடையில் பிறந்தவர்கள் Gen Alpha என்றும் அழைக்கப்பட்டு வரும் நிலையில் வரும் புதுவருடத்துடன் பீட்டா தலைமுறை சேர உள்ளது. 2035இல் உலக மக்கள் தொகையில் 16 வீதமானோர் Gen Beta ஆக இருக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இவர்கள் 22ஆம் நூற்றாண்டை பார்க்க அதிக வாய்ப்புள்ளது. பீட்டா குழந்தைகளின் அன்றாட வாழ்வில் தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக AI தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமேஷன் (Automation) ஆகியவை, பீட்டாவினரின் அன்றாட வாழ்க்கை, கல்வி மற்றும் பணியிடங்களிலும் சுகாதாரம் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றில் முழுமையான ஆதிக்கம் செலுத்தும்.
தொழில்நுட்பம் அவர்களின் விரல் நுனியில் இருக்கும் அதே வேளையில், காலநிலை மாற்றம், நகரமயமாக்கல் மற்றும் உலகளாவிய மக்கள்தொகை மாற்றங்கள் போன்ற பல குறிப்பிப்பிடத்தக்க சவால்களைக் கொண்ட ஒரு சமூக வாழ்க்கையை பீட்டா தலைமுறையினர் எதிர்கொள்வார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.