டூத் பிரஷ்ஷில் இவ்வளவு விஷயம் இருக்கா..? வீட்டில் யாருக்கேனும் நோய் பாதிப்பா..? இனியும் இந்த தவறை செய்யாதீங்க..!!
நம் முன்னோர்கள் காலத்தில் பற்களை கை விரலால் அல்லது வேப்பங்குச்சி, ஆலங்குச்சி போன்றவற்றால் துலக்குவது வழக்கம். ஆனால், அந்தக்காலம் தற்போது மலையேறி போய்விட்டது. இந்த காலத்தில் ஒரு வயது சிறுவர்கள் முதல் 80 வயது பெரியவர்கள் வரை பல் தேய்பதற்கு பிரஷ் பயன்படுத்துகின்றனர்.
இருப்பினும், தினமும் நாம் பயன்படுத்தும் டூத் பிரஸ் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா? சிலர் பல மாதங்களுக்கு மாற்றாமல் அப்படியே வைத்து பயன்படுத்தி வருவார்கள். பழைய பிரெஷ்ஷில் அதிகப்படியான பாக்டீரியாக்கள் வளர்ந்து விட்ட பிறகு, அதைக்கொண்டு உங்கள் பற்களை நீங்கள் சுத்தம் செய்வதன் மூலம் உங்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது.
பழைய பிரெஷ்ஷால் உங்கள் பற்களில் படிந்துள்ள பிளேக்கை அகற்ற முடியாது. உங்கள் டூத் பிரெஷ் எவ்வளவுக்கு எவ்வளவு தேய்மானம் அடைகிறதோ அந்த அளவிற்கு அது பிளேக்கை அகற்றுவதில் திறமையற்றதாக மாறும். உங்கள் பழைய பிரெஷ்ஷால் பிளேக்கை சுத்தம் செய்ய முடியாமல் போகும் பட்சத்தில், உங்களுக்கு வாய் துர்நாற்றம் ஏற்பட ஆரம்பிக்கும்.
எனவே, மருத்துவர்களின் பரிந்துரைப்படி 12 முதல் 16 வாரங்களுக்கு ஒருமுறை டூத் பிரஷ் மாற்ற வேண்டும். அதுமட்டுமின்றி, வீட்டில் யாரேனும் நோய்வாய்ப்பட்டால் அனைவரும் டூத் பிரஷ்ஷை மாற்றுவது நல்லது. மேலும், உங்கள் பிரஷை யாராவது தவறுதலாக பயன்படுத்தினாலும் கட்டாயம் மாற்ற வேண்டியது அவசியமாக உள்ளது.