முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சாப்பிட்ட உடன் டீ, காஃபி குடிப்பதால் இவ்வளவு ஆபத்து இருக்கா..? இனியும் இந்த தவறை பண்ணாதீங்க..!!

07:31 AM May 15, 2024 IST | Chella
Advertisement

டீ, காஃபியை சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும் பின்பும் சாப்பிட்டால், உணவின் மூலம் இரும்பு சத்து கிடைப்பதில் பாதிப்பு ஏற்படும். இதனால் அனீமியா போன்ற குறைபாடுகள் வரலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

டீ, காஃபி குடிக்கும் பழக்கம் இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இந்தியாவில் காலை, மாலையில் டீ, காபி இடம் பெறாத வீடுகளை பார்ப்பது மிகவும் அரிதுதான். கணினியில் வேலை பார்ப்பவர்கள் முதல்.. தீவிர உடல் உழைப்பில் ஈடுபடுவர்கள் வரை வேலைக்கு இடையே கண்டிப்பாக டீ அருந்துவதை பார்க்க முடியும். பலருக்கு டீ அல்லது காபியை குடிக்காவிட்டால் அன்றைய தினமே எதையோ மிஸ் செய்வது போல உணர்வார்கள்.

குளிர்காலமோ, வெயில் காலமோ டீக்கடையில் மட்டும் எப்போதும் கூட்டம் நிறைந்து இருக்கும். மதிய நேரத்தில் கூட பலரும் டீ அருந்தும் பழக்கம் வைத்திருக்கிறார்கள். இளைஞர்கள் பலரும் தங்களுக்கு காலை உணவே… இந்த டீ தான் என்று சொல்லும் அளவுக்கு பட்டினி கிடந்தால் கூட மறக்காமல் டீ குடிப்பதை பார்க்க முடிகிறது. ஆனால், டீ மற்றும் காபியில் உள்ள காஃபினை அதிகமாக எடுத்துக் கொண்டால் உடலுக்கு அவ்வளவு நல்லதல்ல என்று பல்வேறு ஆய்வுகளும் வலியுறுத்துகின்றன.

இந்த நிலையில் தான், டீ காபி அருந்துபவர்களுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எனப்படும் ஐசிஎம் ஆர் புதிய அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தனது துணை அமைப்பான தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் இணைந்து மக்களின் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை மேம்படுத்தும் விதமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், டீ மற்றும் காஃபியில் காஃபின் கலந்துள்ளது. இது மத்திய நரம்பு மண்டலத்தையும் உடலியல் சார்பு நிலையையும் தூண்டுகிறது. 150 மில்லி கப் காஃபியில் 80-120 மில்லி கிராம் காஃபின் உள்ளது. இன்ஸ்டண்ட் காஃபியில் 50 - 65 மில்லிகிராமும், டீயில் 30 - 65 மில்லிகிராம் காஃபினும் உள்ளது. நாளொன்றுக்கு 300 மில்லி கிராமிற்கு அதிகமாக காஃபினை சாப்பிடுவது உடல்நலத்திற்கு நல்லது அல்ல.

அதேபோல சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும் சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரத்திற்கு பின்பும் டீ, காபி அருந்தக் கூடாது. ஏனென்றால், இந்த பானங்களில் டான்னின்ஸ் உள்ளது. இது உணவில் இருந்து உடலுக்கு இரும்பு சத்துக்கள் இந்த பானங்களால் தடைபடும். இதனால் அனீமியா போன்ற உடல் நலக்குறைவு ஏற்படும். அதிகமாக காபி, டீ குடிப்பது ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்" என்று கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பால் கலக்காத டீ குடிப்பது இரத்த ஒட்டத்தை மேம்படுத்துவதோடு, கரோனரி தமனி நோய் மற்றும் வயிற்று புற்று நோய் ஆகிய அபாயத்தை கட்டுப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..? 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..!!

Advertisement
Next Article