முடிவே இல்லையா?. இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்!. ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் கைது!
Fishermen Arrest: எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இன்று இலங்கை கடற்படை கைது செய்தது.
தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடவும் வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார்.
இந்தநிலையில், இன்று தலைமன்னார் - தனுஷ்கோடி இடையே, ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் 2 படகுகளில் மீன் பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, அவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. மீனவர்களின் 2 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்ததாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 15 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.