முக்கிய அறிவிப்பு...! உங்க பகுதியில் மின் பிரச்சினையா…? உடனே இந்த எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம்…!
நுகர்வோர்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகம், சென்னையில் 24 மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிற மின் நுகர்வோர் அழைப்பு மையமான, “மின்னகத்தை” 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களுடைய குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கும் நடைமுறை உள்ளது. ஆனால் அந்த புகார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கால தாமதம் ஏற்பட்டு வருவதாக கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் புகார் மீது விரைவான விசாரணை எடுக்க வேண்டும் என்பதற்காக SMS வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் புகார் அளிக்கும்போது, மின் இணைப்பு எண், பதிவு செய்த செல்போன் நம்பரை மின்னகத்தில் தெரிவிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அந்த இணைப்புக்குரிய அலுவலக பொறியாளரின் எண்ணிற்கு மெசேஜ் அனுப்பப்படும். மேலும், புகார்களை www.tangedco.gov.in Reach us Consumer’s Complaint என்ற தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழக வலைய தள பக்கத்தில் பதிவு செய்யலாம்.
மேலும், புகார்களை சம்பந்தப்பட்ட பிரிவு அலுவகத்தில் பதிவு செய்யலாம். புகார்கள் தீர்க்கப்படவில்லையெனில் அடுத்த கட்டமாக உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர் ஆகியோரை அணுகலாம். ஒவ்வொரு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளரும் குறை தீர்க்கும் கூட்டத்தை அனைத்து கோட்ட அலுலகத்திலும் ஒவ்வொரு மாதமும் நடத்துகிறார்கள். குறைகளை இந்த குறை தீர்க்கும் கூட்டத்தின் போது மேற்பார்வை பொறியாளரிடம் சமர்ப்பிக்கலாம்.
மேற்கண்ட வழிகளில் குறை தீர்க்கப்படவில்லை என்றாலும் கூட, அவைகளை மின்சார விதி 2003 ஷரத்துக்களின் படி ஒவ்வொரு மின் பகிர்மான வட்டத்திலும் ஏற்படுத்தப்பட்ட நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றத்திடம் சமர்ப்பிக்கலாம்.