For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கோடை காலத்தில் அடிக்கடி மின் தடையா..? மின்வாரியம் கையிலெடுத்த சூப்பர் திட்டம்..!! இனி அந்த பிரச்சனையே இருக்காது..!!

10:57 AM Mar 19, 2024 IST | 1newsnationuser6
கோடை காலத்தில் அடிக்கடி மின் தடையா    மின்வாரியம் கையிலெடுத்த சூப்பர் திட்டம்     இனி அந்த பிரச்சனையே இருக்காது
Advertisement

கோடைகாலத்தில் மின்வெட்டு ஏற்படாமல் தடுக்க, மின்மாற்றிகள், கேபிள்களை சீரமைக்க சிறப்பு பராமரிப்பு பணியை மேற்கொள்ள மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் எப்போதுமே மின்தேவை என்பது அதிகமாகவே இருக்கும். உச்சபச்சமாக, கடந்த வருடம் ஏப்ரல் 20ஆம் தேதி, தினசரி மின்தேவை மிக அதிகபட்சமாக 19,347 மெகாவாட் அளவுக்கு அதிகரித்தது. அந்தவகையில், இந்தாண்டு ஜனவரியிலேயே, 17,000 மெகா வாட்டை மின்தேவை தாண்டிவிட்டது. தற்போது கோடை வெயில் துவங்கிவிட்டதால், வரக்கூடிய ஏப்ரல், மே மாதங்களில் மின் தேவையானது எப்படியும் 20,000 மெகாவாட்டை எட்டக்கூடும்.

காரணம் ஏசி, ஏர்கூலர், மின்விசிறிகள், ஃபிரிட்ஜ் போன்றவற்றின் பயன்பாடுகள் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். அத்துடன், தேர்தலும் நெருங்கிவிட்டதால் மின்தேவைகள் இன்னும் அதிகமாகவே இருக்கும். இதை கணக்கிடும்போது, இனிமேல் நம்முடைய தினசரி மின்தேவையாவது 20, 744 மெகாவாட் அளவை தாண்டும் என்கிறார்கள். எனினும், மின் வாரியத்தின் சொந்த மின் நிலையங்களிலிருந்து கிடைக்கும் மின்சாரமும், மத்திய மற்றும் தனியார் நிறுவன மின்சாரமும் நமக்கு போதுமானதாக இல்லை.

எனவே, 3,571 மெகா வாட் மின்சாரத்தை ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரபிரதேசம், டெல்லி போன்ற மாநிலங்களிடம் இருந்து பெறும் யோசனையில் தமிழக மின்சார வாரியம் உள்ளதாக கூறப்படுகிறது. மற்றொருபக்கம், கோடை காலத்தில் மின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மின்வாரியம் சிறப்பு பராமரிப்பு பணிகளை கையில் எடுத்துள்ளது. அதன்படி, அதிக வெப்பம் காரணமாக, மின்விநியோகம் செய்யப்படும் கேபிள்கள், மின்மாற்றிகள் (டிரான்ஸ்ஃபார்மர்) உள்ளிட்டவற்றில் அடிக்கடி பழுது ஏற்பட்டு மின்வெட்டு, குறைந்தழுத்த மின்விநியோகம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதால், சிறப்பு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல, துணைமின் நிலையங்கள் அருகிலுள்ள மின்மாற்றிகள் பராமரிக்கப்பட்டு அவற்றின் தரம் உயர்த்தப்பட உள்ளது. தேவைப்படும் இடங்களில் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்படுவதுடன், குறைந்தழுத்த மின்விநியோகம் செய்யப்படும் இடங்களில் அப்பிரச்சனையைத் தீர்க்க கேபிள்கள், மின்மாற்றிகள் உள்ளிட்டவை மாற்றப்படும் என்று தெரிகிறது. மின் சாதனங்களில் ஏற்படும் பழுது காரணமாக சில இடங்களில், மின் தடைகள் அவ்வப்போது ஏற்பட்டுவிடுவதால், இதனை விரைந்து சரிசெய்ய மின் வினியோக பணியில் அதிக கவனம் செலுத்துமாறு பொறியாளர்களை, மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, மின் வாரிய தலைமை பொறியாளர் ஒருவர் கூறுகையில், தடையில்லாமல் மின்சாரம் வழங்க, மின் சாதனங்களில் பராமரிப்பு பணி நிறுத்தப்பட்டுள்ளது. மாலை, 6 மணி முதல் நள்ளிரவு, 12 மணி வரை மின் தேவை தொடர்ந்து அதிகரித்தபடியே உள்ளது. எனவே, இதுபோன்ற நேரங்களில், மின் சாதனங்களில் ஏற்படும் பழுதை விரைந்து சரிசெய்ய இரவு வரை அலுவலகங்களில் இருந்தபடி, மின் வினியோக பணிகளில் அதிக கவனம் செலுத்துமாறு உதவி பொறியாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்" என்றார்.

Read More : Tasmac | மக்களவை தேர்தல்..!! டாஸ்மாக் கடைகளுக்கு பறந்த உத்தரவு..!! அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்..!!

Advertisement