For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ரிசர்வ் வங்கியில் புதிய மாற்றமா..? ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்ட சஞ்சய் மல்ஹோத்ரா பேட்டி..!!

The new Governor of the Reserve Bank of India, Sanjay Malhotra, has said that he will take the operations of the Reserve Bank forward.
04:20 PM Dec 11, 2024 IST | Chella
ரிசர்வ் வங்கியில் புதிய மாற்றமா    ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்ட சஞ்சய் மல்ஹோத்ரா பேட்டி
Advertisement

ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளை முன்னோக்கிக் கொண்டு செல்வேன் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

Advertisement

மத்திய வருவாய்த் துறைச் செயலராக இருந்த சஞ்சய் மல்ஹோத்ராவை இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக மத்திய அரசு நியமித்துள்ளது. இதையடுத்து, ரிசர்வ் வங்கியின் 26-வது ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ”எனக்கு மிகப்பெரிய பொறுப்பு தரப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளை முன்னோக்கிக் கொண்டு செல்வேன்” என்று தெரிவித்தார்.

மேலும், ”அனைத்து முடிவுகளும் பொது நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்படும். மத்திய வங்கி கொள்கை விஷயங்களில் தற்போதுள்ள நடைமுறைகளே தொடரும். ஆனால், தற்போதைய உலகளாவிய பொருளாதாரம், அரசியல் சூழலையடுத்து எச்சரிக்கையாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். நிதிச் சேர்க்கையை மேலும் ஊக்குவிக்க ரிசர்வ் வங்கி தொழில்நுட்பத்தை விரிவாகப் பயன்படுத்தும்” என்று தெரிவித்தார்.

Read More : ”பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ”..? ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பதிவு..!!

Tags :
Advertisement