கொரோனா JN-1: மீண்டும் வருகிறதா லாக்டவுன்.? ஆய்வாளர் கூறிய தகவல் என்ன.?
கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் கேரளாவைச் சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு கொரோனாவின் புதிய வகையான JN-1 என்ற புதிய வகை தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மகாராஷ்டிரா கோவா மற்றும் பெங்களூர் பகுதிகளிலும் இந்த புதிய வகை கொரோனா தொற்று இருப்பதை மருத்துவர்களும் சுகாதார துறையும் உறுதி செய்தது.
இதனைத் தொடர்ந்து நாடெங்கிலும் கொரோனா நோய் தொற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் எடுக்கப்பட்டு வருகிறது. பல மாநிலங்கள் பொது இடங்களில் முக கவசம் அணிவதை கட்டாயமாக்கி இருக்கின்றன. மேலும் தமிழகத்திலும் கொரோனா தடுப்பு மருந்துகளை தயார் நிலையில் வைத்திருக்கும் படி முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். பீகார் மாநிலத்தில் காய்ச்சல் சளி இருமல் உள்ளவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மாநில அரசு தெரிவித்து இருக்கிறது.
இதன் காரணமாக மீண்டும் லாக் டவுன் ஏற்படுமா? என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா பெருந் தொற்றால் முடங்கியது குறிப்பிடத்தக்கது. அதுபோன்று மீண்டும் ஒரு லாக்டவுன் வருமா.? என பொதுமக்களிடம் பீதி ஏற்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக ஆய்வாளர் விஜயானந்த் என்பவர் விளக்கம் அளித்திருக்கிறார்.
லாக் டவுன் குறித்து பேசி இருக்கும் அவர் "புதியதாக தோன்றியிருக்கும் ஜேஎன் 1 வைரஸ் ஆபத்து விளைவிக்கக் கூடியது என்பது தொடர்பான எந்த ஆதாரங்களும் இல்லை. மேலும் இதற்கு முன்பு இருந்த வைரஸை விட இந்த வைரஸ் அபாயமானது என்பது தொடர்பான சான்றுகளும் இல்லை. இதனால் பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். லாக் டவுன் எதுவும் இருக்காது என தெரிவித்திருக்கிறார். இதனைக் கேட்டு பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.