முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்கு பின்னாடி இம்புட்டு பெரிய வரலாறு இருக்கா..?

Is there a big history of imput after sunday holiday..?
10:12 AM Dec 15, 2024 IST | Mari Thangam
Advertisement

ஞாயிறு என்றாலே ஜாலி தான்.. அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் எனப் பலர் ஞாயிற்றுக்கிழமையையே விடுமுறை தினமாக கடைப்பிடித்து வருகின்றனர். சில அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறந்திருக்கும் வேளையில், மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும். அன்று இறைச்சிக் கடைகளில் விற்பனை அதிகமாக இருக்கும் மதிய நேரங்களில் நாட்டில் சினிமா திரையரங்கங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். இவ்வாறாக அன்றைய நாளில் பொழுது போக்கவும், அழகாகக் கழிக்கவும் மக்கள் அதிகமாக விரும்புவார்கள். இந்த ஞாயிறு விடுமுறை இந்தியாவிற்கு எப்படி வந்தது தெரியுமா? அதைப் பற்றித் தான் இந்த பதிவில் காணப்போகிறோம். 

Advertisement

மாத சம்பள முறை அறிமுகம் : ஆங்கிலேயர்கள் இந்தியாவை கைப்பற்றியபோது இந்தியாவில் பெரும்பாலும் வாரச் சம்பள அடிப்படையிலேயே தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். வாரம் வாரம் குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக்கொண்டு செல்வார்கள். அப்பொழுது எல்லாம் மக்கள் சம்பளம் பெற்றுவிட்டார்கள் என்றால் அடுத்த நாள் வேலைக்குச் செல்லாமல் குடும்பத்துடன் சந்தோஷமாக ஓய்வெடுப்பார்கள்.

இந்நிலையில் ஆங்கிலேயர் மாத சம்பள முறையை அறிமுகப்படுத்தினார்கள். இந்த முறை வந்த போது தொடர்ந்து 1 மாதம் பணியாற்றிய பின்புதான் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது,. இந்த நடை முறை வந்த போது மக்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. மக்கள் எல்லாம் விடுமுறை இன்றி தொடர்ந்து பணியாற்றினர். மாதம் ஒரு முறை மட்டும் விடுமுறை எடுத்துக்கொண்டு தன் குடும்பங்களோடு செலவிடத் துவங்கினர். இது அவர்களின் உடலுக்கும் மனதிற்கும் பெரும் சோர்வை ஏற்படுத்தியது. மாதம் ஒருநாள் ஓய்வு என்பது அவர்களுக்கு போதுமானதாக இல்லை.

இதனால் வாரம் ஒரு நாள் சம்பளத்துடன் விடுமுறை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். பின்னர் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு 1889ம் ஆண்டு ஆங்கிலேய அரசு ஞாயிற்றுக்கிழமையை வார விடுமுறை தினமாக அறிவித்தது. அன்று முதல் இன்று வரை இந்தியாவில் வார விடுமுறை தினமாக ஞாயிறு கடைப்பிடிக்கப்படுகிறது.

அது ஏன் ஞாயிற்றுக்கிழமை..? அதற்குப் பின்னாலும் ஒரு பெரும் அரசியல் இருக்கிறது. அதற்கு முக்கியமான காரணம் ஆங்கிலேயர்கள் பெரும்பாலும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்கள் மதத்தின் முக்கிய நாளாக ஞாயிற்றுக்கிழமையில் தங்கள் குடும்பத்துடன் சர்ச்சிற்கு சென்று வழிபாடு நடத்துவார்கள். அதற்கு வசதியாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. இப்படித்தான் ஞாயிறு விடுமுறை என்பது வந்தது. இந்த முறை வந்தபோதே தொழிலாளர்களுக்கு 30 நிமிட கட்டாய உணவு இடைவெளி விட வேண்டும் என்ற சட்டமும் கொண்டு வரப்பட்டது. பிரிட்டிஷ் காலத்தில் ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி சம்பள தினமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more ; ஒரு நாளைக்கு 10,000 ஸ்டெப்ஸ் நடப்பது உடற்பயிற்சிக்கு மாற்றாகுமா? – நிபுணர்கள் விளக்கம்

Tags :
sunday holiday
Advertisement
Next Article