முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"சங்கி கெட்ட வார்த்தை இல்லை" - சூப்பர் ஸ்டார் ரஜினி புது விளக்கம்.!

01:21 PM Jan 29, 2024 IST | 1newsnationuser7
Advertisement

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கியிருக்கும் திரைப்படம் லால் சலாம். இந்தத் திரைப்படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். சூப்பர் ஸ்டார் கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார். இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது. வருகின்ற பிப்ரவரி 9 ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

Advertisement

இந்தத் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசிய படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது தந்தையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சங்கி இல்லை என தெரிவித்திருந்தார். மேலும் அவரை யாரும் சங்கி என அழைக்க வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தார். இது சமூக வலைதள பயனர்களின் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு சங்கி என்பது கெட்ட வார்த்தை அதனால்தான் ரஜினியை அவ்வாறு அழைக்க வேண்டாம் என அவரது மகள் கூறுவதாக ட்ரெண்டிங் செய்து வந்தனர். இந்தக் கருத்திற்கு சூப்பர் ஸ்டார் தற்போது விளக்கம் அளித்திருக்கிறார்.

இது தொடர்பாக பேசியிருக்கும் ரஜினி " சங்கி என்பது கெட்ட வார்த்தை என ஐஸ்வர்யா சொல்லவில்லை. ஆன்மீகவாதியாக இருக்கும் நான் அனைத்து மதங்களுக்கும் பொதுவானவன் எனவே என்னை யாரும் சங்கி என அழைக்க வேண்டாம் என்றுதான் ஐஸ்வர்யா தெரிவித்து இருந்தார். மேலும் படத்தின் ப்ரோமோஷனுக்காக
சங்கி என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை" என சூப்பர் ஸ்டார் தெரிவித்து இருக்கிறார்.

Tags :
Aishwarya RajnikanthcinemakollywoodrajnikanthSanghi
Advertisement
Next Article