முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’பாலியல் வழக்கு குற்றவாளி திமுகவை சேர்ந்தவரா’..? ’இதை மூடி மறைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை’..!! அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி..!!

Law Minister Raghupathi met reporters regarding the Anna University sexual assault incident.
01:15 PM Dec 26, 2024 IST | Chella
Advertisement

பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்க நினைத்தால் அது நடக்காது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

Advertisement

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”பாலியல் வன்கொடுமை வழக்கில் 6 மணி நேரத்திற்குள்ளாகவே குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் கைதான ஞானசேகரன் திமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. யார் வேண்டுமானாலும் வந்து அமைச்சர்களுடன் புகைப்படம் எடுத்து கொள்ளலாம். அமைச்சர்களை மக்கள் சந்திப்பதை தடுக்க முடியாது.

கைதான ஞானசேகருக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பாலியல் வன்கொடுமை வழக்கை மூடி மறைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. விசாரணை வெளிப்படையாக நடைபெற்று வருகிறது. தவறு செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குற்றவாளியை காப்பாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை. உரிய தண்டனை பெற்றுத்தரப்படும்.

பாஜக ஆளும் மாநிலங்களில்தான் பாலியல் சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்றால் அது தமிழ்நாடு தான். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் குறைவு. பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தைரியமாக புகாரளிக்க முன்வரலாம். அதேபோல், ராமேஸ்வரத்தில் உடை மாற்றும் அறையில் கேமரா வைத்த விவகாரத்தில் கைதானவர் அதிமுக பிரமுகரின் மகன்.

அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி வழக்கு எப்படி இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். திமுகவில் தவறு செய்வோர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை நாங்கள் வெளியிடவில்லை. அதற்கான அவசியமும் இல்லை. அவருடைய விவரங்களை வெளியிட்டால், அவர் எப்படி தைரியமாக புகார் அளித்திருப்பார். பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்க நினைத்தால் அது நடக்காது” என்று தெரிவித்துள்ளார்.

Read More : அண்ணா பல்கலைக்கழக விவகாரம்..!! கைதான ஞானசேகரனுக்கு 4 மனைவிகள்..!! சுவர் ஏறி குதித்து வீடியோ..!! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!

Tags :
அண்ணா பல்கலைக்கழகம்அமைச்சர் ரகுபதிசென்னை
Advertisement
Next Article