For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மீண்டும் உயர்த்தப்பட்டதா ஆவின் பாலின் விலை..? பதறியடித்து விளக்கம் கொடுத்த நிர்வாகம்..!!

07:20 AM Nov 17, 2023 IST | 1newsnationuser6
மீண்டும் உயர்த்தப்பட்டதா ஆவின் பாலின் விலை    பதறியடித்து விளக்கம் கொடுத்த நிர்வாகம்
Advertisement

தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் ஆவின் பாலை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், நெல்லை ஆவின் சார்பில் 200 மி.லி ஆவின் பால் பாக்கெட் விலை ரூ.50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் ஆவின் பாக்கெட்களின் விலை உயர்த்தப்படவில்லை என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் மேலாண்மை இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து வெளியான அறிக்கையில், "நெல்லை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தால் (ஆவின்) தினசரி 41,000 லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. தினசரி 33,700 லிட்டர் பால் பாக்கெட்டுகளாக பொதுமக்கள் பயன் பெறும் வகையில், நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் விருப்பத்திற்கேற்ப அவ்வப்போது புதிய பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. நெல்லை ஆவின் மூலம் Cow Milk அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், இந்த வகை Cow Milk 200 ml Delite எனும் பெயரில் ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் ஆவின் டிலைட் 500 மி.லி பாக்கெட்டுகள் தொடர்ந்து பழைய விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது.

இதில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. தொடர்ந்து ஆவின் டிலைட் பால் விற்பனை அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சமன்படுத்திய பால் (T.M), நிறை கொழுப்பு பால் (FCM) மற்றும் ஆவின் டிலைட் 500 மி.லி பாக்கெட்டுகளை அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை” என விளக்கம் அளித்துள்ளது.

Tags :
Advertisement