பிரதீப் ஆண்டனி விஷயம்..!! பதவி ஆசை..!! பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் விலக இதுதான் காரணம்..!!
இந்தியில் மிகப் பெரிய ஹிட் அடித்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தமிழில் அறிமுகப்படுத்தியது விஜய் டிவி. இந்தியில் ஒருமுறை கூட பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்காதவர்களுக்கு 100 நாட்கள் ஒரே வீட்டில் போட்டியாளர்கள் என்ற கான்செப்ட் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கடந்த 2017ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் முதல் சீசனை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். தமிழில் பிக்பாஸ் முதல் அறிமுகம் என்பதால் மிகப் பெரிய ஹிட் அடித்தது.
இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியது கூடுதல் பலமானது. அவரின் கண்டிப்பு கலந்த மரியாதை, போட்டியாளர்களை பதில் பேச விடாமலே தவறை புரிய வைப்பது, தமிழிலே பேசி நிகழ்ச்சியை கொண்டு போவது என வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே கிடைக்கும் கமலின் தரிசனம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப் பெரிய பலம் சேர்த்தது.
இந்நிலையில் தான், இந்தாண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவதில்லை என கமல்ஹாசன் அறிவித்துள்ளார். சினிமாத்துறையில் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்கள் அதிகமாக இருப்பதால், பிக்பாஸ் தொடரில் இருந்து சிறிய ஓய்வு எடுப்பதாக அவர் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நிறைய கற்றுக் கொண்டதாகவும், இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர்களுக்கு நன்றி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் பிரபல செய்தி வாசிப்பாளர் வினோத் உண்மையான காரணம் அது அல்ல .இப்போது கமல் ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பதால் வருங்காலத்தில் அவருக்கு ராஜ்யசபாவில் எம்பி பதவி கண்டிப்பாக கொடுக்கப்பட உள்ளது. அதை காரணம் காட்டியே இந்த சீசனில் இருந்து கமல் விலகி இருக்கிறார் என அந்த செய்தி வாசிப்பாளர் கூறியிருக்கிறார். zழ்முக்கியமாக பிரதீப் ஆண்டனி விஷயத்தில் அவருடைய சாபம் கூட கமலை இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்க வைத்திருக்கும் என ரசிகர்கள் ஒரு பக்கம் கூறி வருகிறார்கள் என வினோத் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
Read more ; Bigg Boss Tamil Season 8 |ஆரம்பமான பிக்பாஸ் சீசன்.. பல கோடி செலவில் செட்.. போட்டியாளர் இவங்கதான்..!!