முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Election date: இன்று அறிவிக்கப்படுகிறதா மக்களவை தேர்தல் தேதி?… எதிர்பார்ப்பில் அரசியல் வட்டாரங்கள்!

05:30 AM Mar 14, 2024 IST | 1newsnationuser3
Advertisement

Election date: இன்று அல்லது நாளைக்குள் மக்களவைத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement

நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதைத் தொடர்ந்து ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட சில மாநில சட்டப் பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இறுதிகட்ட ஆய்வு செய்வதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு பல்வேறு மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் அண்மையில் ஜம்மு - காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் மற்றும் தேர்தல் பணிக்கு தேவையான துணை ராணுவப் படைகள் குறித்து மத்திய அரசின் உயர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு ஆலோசனை நடத்தியது. இதைத் தொடர்ந்து மார்ச் 11, 12, 13-ம் தேதிகளில் ஜம்மு - காஷ்மீர் சென்ற இக்குழுவினர், மக்களவைத் தேர்தலுடன் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கும் தேர்தல் நடத்தலாமா என்பது குறித்து கள ஆய்வுகளை நடத்தி உள்ளனர். அதனடிப்படையில், மக்களவைத் தேர்தல் தேதியை இன்று அல்லது நாளைக்குள் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

முன்னதாக கடந்த 2019-ம் ஆண்டு மார்ச்10-ம் தேதி மக்களவை பொதுத்தேர்தல் தொடர்பான அட்டவணையை தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதன்படி, அந்த ஆண்டு ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு சுமார் 97 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Readmore:  தேர்தல் திருவிழா!… இன்று கூடுகிறது பிரதமர் மோடி தலைமையிலான குழு!

Tags :
election dateஇன்று அறிவிக்கப்படுகிறதா?எதிர்பார்ப்பில் அரசியல் வட்டாரங்கள்மக்களவை தேர்தல் தேதி
Advertisement
Next Article