For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டணம் உயர்கிறதா..? தீயாய் பரவும் தகவல்..!! உண்மை இதுதான்..!!

An explanation has been given regarding the spread of information that the government is going to increase the electricity tariff in Tamil Nadu.
10:16 AM Jun 11, 2024 IST | Chella
தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டணம் உயர்கிறதா    தீயாய் பரவும் தகவல்     உண்மை இதுதான்
Advertisement

தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை அரசு உயர்த்த உள்ளதாக பரவும் தகவல் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. பழைய குறைந்தபட்ச கட்டணம் 170 ரூபாயாக இருந்த நிலையில், புதிய கட்டணமாக 55 ரூபாய் உயர்த்தப்பட்டு 225 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தான், கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் கட்டண உயர்வு தொடர்பான பதிவுகளை மறுபதிவு செய்து தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இதனால் பயனாளர்களிடையே பெரும் குழப்பம் நிலவி வந்தது. இந்த தகவல்களை தற்போது தமிழ்நாடு அரசு, மின்வாரியம் ஆகியவை மறுத்துள்ளன. இது தொடர்பாக அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, ’ஜூலை 1 முதல் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக பரவும் தகவல் வதந்தி என தெரிவித்துள்ளது. கடந்த 2022 ஜூலையில் வெளியான செய்தி தற்போது மீண்டும் பகிரப்பட்டு வருகிறது. தற்போது மின் கட்டண உயர்வு செய்யப்படவில்லை. யாரும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம்” என தெரிவித்துள்ளது.

Read More : ரூ.1,000 உரிமைத்தொகை..!! இனி இவர்களுக்கும் கிடைக்கப்போகுது..!! தேதி குறிச்சாச்சு..!! ரேஷன் அட்டையும் ரெடி..!!

Tags :
Advertisement