தமிழ்நாட்டில் தீபாவளிக்கு முந்தைய நாளும் விடுமுறையா..? மொத்தம் 5 நாட்கள்..!! வெளியான சூப்பர் அறிவிப்பு..!!
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் முதல் வாரத்தில் வருவது வழக்கம். ஆனால், இந்தாண்டு முன்கூட்டியே அக்டோபர் 31ஆம் தேதி வருகிறது. அன்றைய தினம் விடுமுறையாகி விடுகிறது. இதற்கிடையே, நவம்பர் 1ஆம் தேதி அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று தீபாவளிக்கு மறுநாளும் தமிழ்நாடு அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.
நவம்பர் 2 மற்றும் 3ஆம் தேதி சனி, ஞாயிறு வருகிறது. அதேபோல், நவம்பர் 9ஆம் தேதியும், 10அம் தேதியும், நவம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் சனி, ஞாயிறு வருவதால் விடுமுறையாகி விடுகிறது. அதேபோல், நவம்பர் 23, 24ஆம் மற்றும் 30ஆம் தேதி விடுமுறை வருகிறது. எனவே, நவம்பர் மாதத்தில் மட்டும் பள்ளிகளுக்கு மொத்தம் 10 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.
இந்நிலையில் புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 30ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 1ஆம் தேதி புதுச்சேரி விடுதலை நாள், நவம்பர் 2ஆம் தேதி கல்லறை நாள், நவம்பர் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என தீபாவளிக்கு மொத்தம் 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தமிழ்நாட்டிலும் தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான அக்டோபர் 30ஆம் தேதி விடுமுறை அறிவிக்க பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், தமிழ்நாடு அரசு இந்த கோரிக்கைக்கு எந்தவித பதிலும் அளிக்கவில்லை. எனவே, தமிழ்நாடு முழுவதும் வருகிற நவம்பர் 1ஆம் தேதி மட்டுமே கூடுதல் விடுமுறை கிடைக்கும் நிலை உள்ளது.
Read More : சென்னை To கோவைக்கு ரூ.2,890 டிக்கெட் கட்டணம்..!! தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போக நினைப்பவர்கள் இதை பாருங்க..!!