முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கோவிட் தடுப்பூசி தான் இளைஞர்களின் மரணத்திற்கு காரணமா..? ஐசிஎம்ஆர் பரபரப்பு விளக்கம்..!!

01:32 PM Nov 21, 2023 IST | 1newsnationuser6
Advertisement

கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய இளைஞர்கள் மாரடைப்பு உட்பட ஒரு சில காரணங்களால் உயிரிழக்கின்றனர். குறிப்பாக, ஜிம்மில் அதிக அளவு ஒர்க் அவுட் செய்பவர்கள் மாரடைப்பு காரணமாக இறந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து ஐசிஎம்ஆர் ஆய்வு செய்து விளக்கம் அளித்துள்ளது.

Advertisement

இந்தியாவில் இளைஞர்கள் திடீர் மரணம் அடைய கோவிட் தடுப்பூசி தான் காரணம் என்று கூறுவது சரியல்ல என்றும் கொரோனா சிகிச்சை, குடும்பங்களில் உள்ள நோய், வாழ்க்கை முறை மாற்றங்களால் இளைஞர்களின் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. கடந்த 2021 அக்டோபர் 1 முதல் 2023ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை உயிரிழந்த 18 முதல் 45 வயதினர்களை ஆய்வு செய்த பின்னர் அறிந்து முடிவு வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிட் தடுப்பூசி காரணமாகத்தான் இளைஞர்களுக்கு மாரடைப்பு நோய் வருகிறது என்று சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியான நிலையில், இந்த தகவலை ஐசிஎம்ஆர் மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Tags :
இந்தியாஇளைஞர்கள்கொரோனாகோவிட் தடுப்பூசி
Advertisement
Next Article