For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பாராளுமன்றத் தேர்தல் 2024: "பாஜக - தெலுங்கு தேசம் கூட்டணி ..?.." அமித்ஷா, சந்திரபாபு நாயுடு இன்று சந்திப்பு.!

02:02 PM Feb 07, 2024 IST | 1newsnationuser7
பாராளுமன்றத் தேர்தல் 2024   பாஜக   தெலுங்கு தேசம் கூட்டணி        அமித்ஷா  சந்திரபாபு நாயுடு இன்று சந்திப்பு
Advertisement

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த தெலுங்கு தேசம் கட்சி 2019 தேர்தலுக்கு முன்பாக பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியை முடித்துக் கொண்டது. ஆந்திர பிரதேசத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை என கூறி தெலுங்கு தேசம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி முடிவுக்கு வந்தது. இந்நிலையில் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு தெலுங்கு தேசம் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கு இடையே கூட்டணி ஏற்பட வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

Advertisement

இந்நிலையில் தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை இன்று மாலை டெல்லியில் சந்திக்க இருக்கிறார். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சந்திரபாபு நாயுடு மற்றும் பிரதமர் மோடி இடையேயான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமான தெலுங்கு தேசம் கட்சி 2019 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கூட்டணியில் இருந்து வெளியேறியது. சந்திரபாபு நாயுடு ஆந்திர பிரதேசத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கேட்டுக் கொண்டார். இதற்கு பாரதிய ஜனதா கட்சி ஒப்புதல் அளிக்காததால் கூட்டணியில் இருந்து வெளியேறினார். தற்போது பிரதமர் மோடி சந்திரபாபு நாயுடு மற்றும் அமித்ஷா ஆகியோருடைய சந்திப்பு மீண்டும் தெலுங்கு தேசம் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி அமைவதற்கு வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவித்து பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி தேசிய ஜனநாயக கூட்டணி நான் ஒரு இடங்களுக்கு மேல் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் என தெரிவித்தார். பாஜக மற்றும் 370 தொகுதிகளை கைப்பற்றும் என உறுதியுடன் கூறினார். மேலும் எதிர்க்கட்சிகள் தேர்தலில் போட்டியிட வரும்போது இல்லை என தெரிவித்த அவர் தங்களது எதிர்க்கட்சி இருக்கையிலே அவர்கள் அமர விரும்புவதாகவும் தெரிவித்தார்.

Tags :
Advertisement