முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’இதுபோன்ற கோரிக்கைகளை எப்படி ஊக்குவிக்க முடியும்’..? உயர்நீதிமன்ற கிளை அதிரடி கருத்து..!!

The high court branch has taken action in the case filed against Tasmac bars for unsanitary conditions and serving expired food items.
07:18 AM Aug 09, 2024 IST | Chella
Advertisement

டாஸ்மாக் பார்களில் சுகாதாரச் சீர்கேடு, காலாவதியான உணவுப் பொருட்களை கொடுப்பது ஆகியவற்றிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற கிளை அதிரடி கருத்து தெரிவித்துள்ளது.

Advertisement

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த ஜஸ்டின் ராஜ் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ”டாஸ்மாக் கடைகளுடன் இணைந்து செயல்படும் பார்களில் கழிப்பறை, இருக்கைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை, பார்களில் விற்கப்படும் அசைவ உணவுகள் மற்றும் உணவு பண்டங்கள் காலாவதியானதாக உள்ளது. மேலும், அவை கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. எனவே, மது அருந்தும் மது பிரியர்களுக்கு இதனால் உடல்நலக்குறைவு மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படும் டாஸ்மாக் பார்களில் சுகாதாரத்தை பாதுகாப்பதுடன், உணவுப் பொருட்கள் காலாவதியானது மற்றும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ”தமிழ்நாட்டில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில், இது போன்ற கோரிக்கைகளை நீதிமன்றம் ஊக்குவித்தால் மதுப்பழக்கத்தை ஊக்குவிப்பது போல் ஆகிவிடும். ஆகையால், மனுதாரர் தேவைப்பட்டால் மதுவை டாஸ்மாக் கடையில் வாங்கிச் சென்று வீட்டில் வைத்து அருந்திக் கொள்ளலாம்” என தெரிவித்ததுடன் அந்த மனுவையும் தள்ளுபடி செய்தது.

Read More : ”இனி இவர்களும் ரேஷன் பொருட்கள் வாங்கலாம்”..!! வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

Tags :
courtTamilnadutasmac
Advertisement
Next Article